பக்கம்:தாய்மை.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியர் காட்டும் மரபுநெறி 16:

எழுத்ததிகாரத்தில் எழுத்துக்களின் எண்ணிக்கை, வடிவு, பிறப்பியல் முதலியவற்றையும் அவற்றோடு தொடர்புடைய பிற இயல்புகளையும் ஐயத்துக்கு இடமின்றித் திட்டவட்டமாகக் தொல்காப்பியர் கூறிய காரணமே இன்றளவும் அவற்றில் மாறுபாடு காணாத ஒரு நிலையினை நிறுவியுள்ளது. பிற மொழிகளின் வரிவடிவம் சொல்லாட்சி முதலியன மாறி வரும் நிலை காணும் மொழியியல் அறிஞர்கள், ஆயிரம் ஆயிரம் ஆண்டு களாகியும் மாறாத இந்த மரபுநிலையினை எண்ணி வியக்கும்தன்மையினையும் நாம் அறிவோம். எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய், முப்பஃதென்ப’ என வரையறுத்தது எம்மொழியிலும் காணமுடியாதது. இத்ற்கு உரையாசிரியர்தம் விளக்கங்களையெல்லாம் காணின் இதன் நிலை மேலும் நன்கு சிறக்கும். -

தொல்காப்பியர் மொழியும் அதன் அடிப்படையாகிய எழுத்தும் மக்கள் வாழ்வியல் மரபு அடிப்படையில் அமைந்துள்ளனவென்பதனைப் பல சூத்திரங்கள் வழியே விளக்கிக் காட்டுவது எண்ணத்தக்கதாகும். வாழ்வில் காணா உயிர், கண்ட மெய் வழியே தோன்றி இயங்கும் திலையினை எழுத்தினொடு சார்த்தி மெய்யின் வழியது உயிர் தோன்று நிலையே” (நூன்மரபு 18) எனக்காட்டுவது எண்ணத் தக்கதாகும். இச்சூத்திரத்துக்கு முன்னர் அவ்வெழுத்துக்களின் அளபு, இயல்பு இவைகளைக் கூறும் முறையிலும் பிற நெறியிலும் தமிழ் எழுத்தொடு சார்ந்த மரபு நெறி இன்றும் கெடாதிருப்பதைக் காண இயலு மன்றோ! அப்படியே புணரியலில் மெய் உயிர் நீங்கின் தன் உருவர்கும். (புண, 37) என்று பிரிந்த நிலையினையும் எண்ணிப்பார்க்க வேண்டும். இவ்வாறு தொல்காப்பியர் தம் எழுத்தின் மரபு வாழ்வின் மரபோடு பொருந்திய தன்மையின்ை எண்ணிப்பார்த்தல் நலம் ப்யப்ப்தாகும்.

1 I

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/167&oldid=684560" இலிருந்து மீள்விக்கப்பட்டது