பக்கம்:தாய்மை.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 . தாங்கை

பிறப்பியல் முதல் சூத்திரத்தின் வழியே (உந்தி முதலா) தொல்காப்பியர் எல்லா எழுத்துகளுக்கும் ஒலி வடிவம் அமைய வேண்டிய மரபினைக் காட்டுகிறார். அவ்வொளிகள் உடலில் ஒலிக்கருவிகளின் வழியே எவ்வெவ்வாறு புகுந்தும், நுழைந்தும், குழைந்தும், கூடியும் வருகின்றன என்று காட்டிய மரபுதான், எத்தகைய மாற்றங்களுக்கிடையிலும் அவ்வொலி பிறழா நிலையில் இன்றும் மொழி மரபினைக் கட்டிக் காத்து வருகின்றது. ஒரு சில எழுத்தொலிகள் பேச்சு வழக்கில் பிறழ்ந்தன போலக் காணப்படினும், அவையும் வரிவடிவம் பெறும் போது மாறா நிலையில் அமைவதும் இதனாலேயாம். பின் ஒலி உறுப்புக்கள் ஒவ்வொன்றின் அசைவினையும் மாற்று நிலையினையும் ஒவ்வொரு எழுத்தினுக்கும் கட்டும் போது அம்மரபு இன்றும் நம்மை அறியாமலேயே போற்றப் படுவதை எண்ண முடிகின்றதன்றோ?

புணரியலிலும் அதனோடு சார்புடைய தொகை மரபு முதலிய பிற இயல்களிலும் தொல்காப்பியர் சொற்களை எடுத்தாளும் நிலையில் போற்றும் மரபு எண்ணத்தக்கதாகும். வெறும் சொற்களே உயர்திணை, அஃறிணை என ஆகா என்பதும், அவை சுட்டும் பொருள் களே அத்திணையினைப் பெறத் தகுதி உடையன என்பதும் பிற இலக்கணப் புலவர்களால் நன்கு எடுத்துக் காட்டப் பெறவில்லை. ஆயி னும் தொல்காப்பியர் அந்த நிலையினைத் திட்டமாகக் காட்டி, .

“ உயர்திணைப் பெயரே அஃறிணைப் பெயரென்று

ஆயிரண் டென்ப பெயர்நிலைச் சுட்டே (புண. 15) என விளக்குகின்றார். எனவே வெறும் சொற்களன்றி, சொல்காட்டும் பொருள்களே இந்த மரபு நிலையின் வழியே எண்ணத்தக்கது என்பது அறிய வேண்டுவதாகும். சில சொற்கள் மரபுவழிக் கொள்ளும் பொருள் நி0ை யினையும் அவை மற்றப் பொருள் நிலைகளோடு மாறுபடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/168&oldid=684561" இலிருந்து மீள்விக்கப்பட்டது