பக்கம்:தாய்மை.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியர் காட்டும் மரபுநெறி I67

மரபினையும் பலப்பல சூத்திரங்களில் தொல்காப்பியர் விளக்கிச் செல்கின்றார். ஒன்றிரண்டினை மட்டும் இங்கே சுட்டுகிறேன்.

“ஒடுமரக் கிளவி உதிமர இயற்றே” (உயிர் மயங். 60) விண்ணென வரும் காயப் பெயர் (புள்ளி. 10) வளியென வரும் பூதக் கிளவியும்’ (உயிர். 40) ‘இருளென் கிளவி (புண 107) - போன்றவற்றான் பெயர்களைச் சுட்டும் மரபும் முறையும் அவற்றுள் பொதிந்த விளக்கங்களும் எண்ணத்தக்கனவாம். - அப்படியே,

வல்லெழுத்து மிகினும் மான மில்லை’

. (உயிர்மயப். 28, 48) *முதனிலை நீடினு மான மில்லை’ (குற்றிய. 59) என்ற சூத்திரங்களிலும் பிறவிடங்களிலும் மானம்” போன்ற சொற்களைத் தொல்காப்பியர் பயன்படுத்தும் போது அச்சொற்கள் போற்றப் பெறும் மரபினை எண்ணிப் பார்க்கக் கடமைப்பட்டிருக்கிறோம். அச் சொல்லுக்குச் சார்பாக வரும் பொருள்களை ஒரளவு உரை யாசிரியர்கள் விளக்கினார்கள் என்றாலும் முற்றும் அச் சொல் ஆளப்பெற்ற மரபு நெறியினை ஆராய்ந்து அறு பிட்டார் எனக் கொள்ள இயலாது.

இவையன்றி உயிர்மயங்கியல், புள்ளிமயங்கியல் என்ற பெயர்களின் அமைப்பும் மெய்யென்னாது புள்ளி’ என அவ்வெழுத்தைச் சுட்டுவதும் இவை போன்ற பிறவும் தொல்காப்பியர் கட்டிக் காத்த மரபு நெறியாகும். இவற்றுள் ஒரு சில காலத்தால் மாற்றம் பெறு நிலையில் அமையினும், அடிப்படை இன்றளவும் மாறாதிருப்பது நோக்கத்தக்கது. .

எழுத்ததிகாரத்து இவ்வாறெல்லாம் மரபு நிலை யினைத் தொட்டும் வினக்கியும் கட்டியும் காட்டித் தம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/169&oldid=684562" இலிருந்து மீள்விக்கப்பட்டது