பக்கம்:தாய்மை.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"168 - தாய்மை

இலக்கண மரபு நெறியினை விளக்கிய தொல்காப்பியர், அவ்வதிகாரத்தின் இறுதிச் சூத்திரத்தில் காலத்தொடும் கருத்தொடும் பொருந்தி வாழவேண்டிய தமிழ்ச்சமுதாயம் அம்மரபு நெறி கெடா வகையிலும் அதே வேளையில் கால கதியுடன் பிற சமுதாய நெறிகள்-மொழி அமைப்புகள்இன்ன பிறவற்றோடும் மக்கள் வாழ்வு பொருந்தும்போது தேவையான மாற்றங்களுக்கு ஒரளவு வழிவகுத்து, அதை வகுப்பவர் எத்தகையவர் என்பதையும் சுட்டிக்காட்டு “கிறார். எனவேதான் எழுத்து, சொல், மொழி முதலிய ‘வற்றில் யார் யாரோ கொண்டுவரும் மாற்றங்களெல்லாம்

தொல்காப்பியர் தம் மரபுநெறியின் முன் நிற்காது மறைந்தும் மாய்ந்தும் செல்கின்றன. இ வ் வா று. எழுத்தியல் மரபினைக் கட்டிக்காத்த தொல்காப்பியர், சொல்லதிகாரத்தும் சில இன்றியமையா மரபினைக் காத்துச் செல்கிறார். அந்த அதிகாரத்துள் புகுமுன், aஎழுத்ததிகாரத்தின் இறுதிச் சூத்திரத்தை உங்கள் முன் வைக்கிறேன்.

கிளந்த அல்ல செய்யுளில் திரிகவும் வழங்கியல் மருங்கின் மருவொடு திரிகவும்

விளம்பிய இயற்கையின் வேறுபடத் தோன்றின் வழக்கியல் மருங்கின் உணர்ந்தனர் ஒழுகல் - கன்மதி காட்டத் தென்மனார் புலவர்’ (79). இதில் தாம் கூறியதாகக் காட்டாது புலவர் கூறினார் எனக் காட்டி நல்லறிவினது ஆராய்ச்சியால் வழக்கு இயலுமிடத்து அவற்றின் முடிவு வேறுபாடுகளை அறிந்து தடத்துக” (இளம்பூரணர்) என எச்சரிக்கை விடுத்தே இந்த, அதிகாரத்தை முடிக்கிறார். .

இனி, தொல்காப்பியனார் சொல்லதிகாரத்தில் கையாண்ட மரபு நெறிகளுள் ஒரு சிலவற்றைச் சுட்டிக் கைாட்டலாம் என எண்ணுகிறேன். முதல் இயலே, ெேசால்லதிகாரத்தில், கிளவி ஆக்கம்’ என்பதாகும். இத்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/170&oldid=684564" இலிருந்து மீள்விக்கப்பட்டது