பக்கம்:தாய்மை.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியர் காட்டும் மரபுநெறி I 71


அதனைப் போற்றுவதால். எனவேதான் தொல்காப்பியர் இந்த இயலைத் தொடங்கும்போது, -

  • விளியெனப் படுப கொள்ளும் பெயரொடு

தெளியத் தோன்றும் இயற்கைய என்ப” (விளி. 2) என்கிறார். தெளியத் தோன்றும் என்பதற்கு வேறு உரைகள் உரையாசிரியர் கூறியுள்ளனர். என்றாலும், அது மரபுநெறி நன்கு தெளியத் தோன்றும் என்ற வகை பிலேயே வழங்கப்பெறுகின்றது. மேலும் அத்துடன் அது தான் இயற்கை என்பதையும் உடன் கூறிவிட்டார் தொல் காப்பியர். எனவே, இவ் விளிமரபு வெறும் சொல்லிலக் கன மட்டுமன்றி வாழ்வியல் மரபினை வரையறுக்கும் ஒன்று எனத் தெளிதல் வேண்டும்.

அடுத்து வரும் .ெ ப ய ரிய வி ல் சொல்லுக்கும், பொருளுக்கும் தொல்காப்பியம் காட்டும் மரபுநெறி எண்ணத் தக்கதாகும். இந்த இயலின் முதற் குத்திரம் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே (பெய 1) என்பதாகும். இதன் கருத்தென்ன? இதற்குச் சேனாவரை பர்தம் விளக்க உரை சிறந்த ஒன்றாகும். சொற்கள், தொடர்மொழிகள், அசைச் சொற்கள் அனைத்துமே பொருள் உணர்த்தும் மரபின என்பதைச் சேனாவரையர் திட்டமாக விளக்குகின்றார். இந்த மரபு காலத்தால் மறக்கப்பட்டதாலேயே பல இடர்ப்பாடுகள் வருகின்றன. பின்வந்தவர்கள் இந்த மரபு நெறியை மறுத்து அல்லது காரண அடிப்படை-பொருள் நிலை-மறந்து, இடுகுறி: என்ற ஒன்றை அமைத்துக் கொண்டனர். அது அவர்தம் அறியாமையால் ஏற் பட்ட தவறா கும். எனவே சொல்லையும் பொருளையும் காக்க வேண்டிய மரபு நெறியினைத்தொல்காப்பியர் இதில் நன்கு விளக்கி, மேலும் பல குத்திரங்களில் இவ்வுண்மையினைத் தெளிவு படுத்து கிறார். அடுத்துன்ன இரண்டு சூத்திரங்கள் அதற்குச் சான்று பகரும் எனக் கூறி மேலே செல்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/173&oldid=684567" இலிருந்து மீள்விக்கப்பட்டது