பக்கம்:தாய்மை.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 தாய்மை

வினையினைப் பற்றித் தொல்காப்பியர் நினைக்கும் போது, அதற்குரிய பல்வேறு செயல்கள் நினைவுக்கு வருகின்றன. அவர் எந்த இலக்கண மரபையும் வாழ்வோடு பிணைத்துப் பார்க்கின்றவராதலின், இந்த வினையினையும் அந்த நெறியில் காண்கிறார். இலக்கண வினை வேற்றுமை யினை மட்டும் ஏற்காது காலத்தைப் பெற்றுவரும் எனச் சொல்ல நினைத்தார். அப்படியே உயிர்களாற்றும் வினையும், அவ்வுயிர் எந்தப் பிறவியில் எந்த நில்ையில் இருந்தாலும், அந்த வேற்றுமையின்ைக் கருத்தில் கொள்ளாது, இது நினைப்பின் உரிய காலத்தில் அவனைப் பற்றிப் பயன் தரும் என்ற உண்மையினையும் நினைத்தார். இரு மரபு நெறிகளையும் இனைத்து,

- வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது

கினையுங் காலைக் காலமொடு தோன்றும் ‘ -

(வினை. 1)

எனச் சூத்திரம் செய்து, அதனினும் வேறு இல்லை என்பதையும் எனப்படுவது’ என்ற தொடரால் அறுதி யிடுகிறார். இத்தொடர்களின் விளக்கங்களை இலக்கண மரபுநெறி நின்று சேனாவரையர் நன்கு விளக்குகிறார்.

இவ்வாறே வினையியலுள்ளும் பின்வரும் இடையியல் முதலியவற்றுள்ளும் இலக்கண மரபு ந்ெறியுடன் சமுதாய மரபு நெறியினையும் தொல்காப்பியர் இணைத்தே செல்வதைப் பயில்வார் அறிவர். இடைச்சொல் உரிச் சொல் முதலியன பெயரையும் வினையையும் சார்ந்து வருகின்றனவேனும், அச் சொற்களை அவை உணர்த் தாது, அச்சொற்கள், காட்டும் பொருளையே அவை சார்ந்து உணர்த்தும் என்ற உண்மையினைச் சேனா வரையர் இடையியல் முதற் குத்திரப் பொருள் வ விளக்கிக் காட்டுகிறார். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/174&oldid=684568" இலிருந்து மீள்விக்கப்பட்டது