பக்கம்:தாய்மை.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியர் காட்டும் மரபுநெறி 17.3

j

- ஈண்டுப் பெயரும் வினையும் உணர்த்தும் பொருளைத்

. சார்ந்து கின்று அவற்றை வெளிப்படுப்பதல்லது தமக்கெனப் பொருள் உடையன அல்ல’ (இடை. உரை)

என்பது அவர் விளக்கம்

பின் உரிச்சொல் முதற் சூத்திரத்தில் இசையினும் குறிப்பினும் பண்பினும் றோன்றி எனவரும் சொற் றொடருக்குச் சேனாவரையர், இளம்பூரணர் போன்றார் காட்டும் உரை, மரபுநிலையில் பல பொருளை உணர்த்து கிறது எனலாம். அவையெல்லாம் ஈண்டு விகிப்பிற் பெருகும் என அஞ்சுகிறேன். குறிப்பு, மனத்தாற் குறித்து உணரப்படுவது: பண்பு, பொறியால் உணரப்படும் குணம்’ போன்ற நுண்ணிய கருத்துக்களையும் அவற்றின் உள்ளீடாகிய மரபு நெறிகளையும் பயில்வார் உணர்வர்.

உரியியல் முதலில் முழுதும் பல சொற்களின் மரபு நெறி கெடாத வகைக்கு அரண் செய்வதாக அமைவ தாகும். வெறும் அகராதி” போன்று சொற்பொருள் பற்றியனவாக அமையும் சூத்திரங்கள் பல இருப்பினும், அவை தமிழ்ச் சொற்களின் மரபு நெறியைக் காப்பனவே யாம். எ ந் த ச் சொல் ைல யு ம் எந்தவகையிலும் பயன்படுத்தலாம் ண ன எ ண் ணு ம் சி ல ருக் கு, இந்த மரபுநெறி தடுப்புக் கோலாக அமைகின்றது. எல்லா உரிச் சொற்களும் ஈண்டுக் கூறப்படவில்லையே என்பாருக்கு இரண்டாம் சூத்திரமும் அதன் உரைகளும் பதில் திரும் என்பது தேற்றம். - - .

சாயல் மென்மை (28), வம்பு நிலையின்மை (30), மாதர் காதல் (31), வெம்மை வேண்டல் (36), நன்று பெரிதாகும் (40), தெவு கொளற் பொருட்டே (47), தெவ்வுப் பகையாகும் (49), உசாவே சூழ்ச்சி (73) என்பனவும் பிறவும் .ெ சா ற் களும் பொருள்களும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/175&oldid=684569" இலிருந்து மீள்விக்கப்பட்டது