பக்கம்:தாய்மை.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 - தாய்மை

மரபு நிலை திரியாது அமையவேண்டிய வழியினை வரை

யறுக்கின்றன. இவற்றுள் பலவும் இன்றளவும் இதே மர்பு நெறி கெடாமல் தமிழ் மொழியில் வழக்கத்தில் உள்ளமை யினை அறிகிறோம். இவ்வாறு கூறிய தொல்காப்பியர் 98ஆம் சூத்திரத்தில் பல பொருள் ஒரு சொற்களும் பல வாக இருக்க அவற்றைப் பயன்படுத்தும் மரபினையும், அவ்வவ்விடத்துக்கு ஏற்ற பொருள் நிலையினையும் உய்த் துணர வேண்டும் என்கிறார்.

‘ மெய்பெறக் கிளந்த உரிச்சொல் எல்லாம்

முன்னும் பின்னும் வருபவை காடி ஒத்த மொழியாற் புணர்ந்தன. ருணர்த்த தத்தம் மரபில் தோன்றுமன் பொருளே’ என்பது சூத்திரம். உரையாசிரியர்கள் இம் மரபுநெறி யினை நன்கு விளக்கியுள்ளனர். இச்சூத்திரமே யன்றி,

  • பொருட்குப் பொருள் தெரியின் அதுவரம்

பொருட்பிறி தில்லை உணர்த்த வல்லின்’ (95)

மொழிப்பொருட் காரணம் விழுப்பத் தோன்றா’ (67) என்ற சூத்திரங்கள் இம் மரபுநெறி பற்றியும் அதனோடு சார்ந்து வரும் பொருள் கொள்ளும் நிலை பற்றியும் சொல்லப்பட்டன எனக் கொள்ளல் வேண்டும். சேனா வரையர் சுட்டியபடி இந்த இலக்கண மரபுகள் உரிச்சொல் பற்றி யோதினாரேனும் ஏனைச் சொற்பொருட்கும் இஃதொக்கும் எனக் கொள்ளல் வேண்டும். எனவே எழுத்தும் சொல்லும் தமிழ்மொழியில் மரபுநெறி கெடாத வகையில் செல்வதை இதுவரையில் தொல்காப்பியர் குறித்தார் எனக் கொள்ளல் சாலும்.

இவ்வாறு எழுத்து, சொல் இவை பற்றியெல்லாம் மரபு கெடா நெறியினைக் குறித்து விளக்கிய தொல்காப்பியர் கடைசியாக எச்ச இயலிலும் சில மரபு நெறிகளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/176&oldid=684570" இலிருந்து மீள்விக்கப்பட்டது