பக்கம்:தாய்மை.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியர் காட்டும் மரபுநெறி 175.

வற்புறுத்துகின்றார். அந்த மரபுநெறிகளையெல்லாம் விளக்கின் பெருகும். எனினும் ஒன்றை மட்டும் நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். & வடசொற்களைத் தமிழில் வழங்கும் மரபினை நம்மில் பலர் இன்று எண்விப் பார்ப்பதில்லை. பிற மொழிச் சோற்களைக் கடன் வாங்குவதில் தவறில்லை. ஆனால்: அவற்றை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழில் உள்ள கட்டுமரம்’ போன்ற சொற்கள் ஆங்கிலத்தில் எடுத்தாளப் பெறு கின்றன என்பர். பல தமிழ்ச் சொற்கள் பழைய இலத்தீன் கிரேக்க மொழிகளில் வழக்கத்தில் உள்ளன. ஆனால் தமிழில் உள்ள எழுத்தொலிகளால் அவர்கள் எடுத்தாளுவதில்லை. சொல்லை ஆங்கில எழுத்திலே, ஆங்கில மரபு கெடாத வகையிலே எடுத்தாளுகின்றனர். ஆனால்தமிழில் மட்டும், ஐலம், புஷ்பம் போன்று வட சொற்களை வடவெழுத்தொடு வழங்குவதோடு, அதைச் சரியெனச் சாதிப்பவரும் உளர். அவருள் தொல்காப்பியத்தை நன்கு பயின்றவர்களும் சிலர் உள்ளனர். இதனாலேயே தொல் காப்பியர் அன்று தமிழில் பெரும்பான்மையாக வழங்கிய வேற்று மொழியாகிய வடமொழிச் சொற்களை வழங்க வேண்டிய மரபினை வற்புறுத்திச் சொல்கிறார்.

  • வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ

எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே”

- . (எச். 5): என்பதன் வழி, திட்டமாக அந்த எழுத்துக்களைப் பயன் படுத்த வேண்டாத நிலையினை விளக்குகிறார். உரை யாசிரியர்கள், எழுத்தொடு புணர்ந்த என்ற தொடருக்கு. “இரு திறத்தார்க்கும் பொதுவாய எழுத்து”, “இருமொழிக் கும் பொதுவாய எழுத்து’ எனப் பொருள் கூறுவர். இரு. மொழிக்கும் பொதுவாய எழுத்துக்கள் பல உள்ளன. எனவே, பொதுவான எழுத்துக்களால் ஆகிய வட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/177&oldid=684571" இலிருந்து மீள்விக்கப்பட்டது