பக்கம்:தாய்மை.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 தாய்மை

சொற்களை அ ப் படி யே கொள்ள லாம். வட மொழிக்கே உரிய சிறப்பெழுத்துக்களால் ஆகிய வட சொற்களைத் தமிழ் ஒலிக்கேற்ப மாற்றி வழங்கவேண்டும் என்னும் கருத்தினைத் தொல்காப்பியர் அடுத்த நூற்பாவில் தெரிவிக்கிறார். தமிழ்மொழிக்கே உரிய எழுத்தின் வரிவடிவத்தில் வழங்கப்பெற வேண்டும் என்ற மரபுக்காகவே இதனைக் கூறினார் எனக் கொள்வது பொருந்தும். எக்காரணத்தைக் கொண்டும் வேற்றுமொழி எழுத்துக்கள் இடம்பெறலாகாது என்ற மரபினையே தொல்காப்பியர் வற்புறுத்துகிறார் என்பது தெளிவு.

இந்த மரபினைப் பயன்படுத்தாத காரணத்தினாலே தான் நம் நாட்டில் மொழிப் போராட்டங்கள் நிகழ் லகின்றன. பள்ளியில் எழுத்துக் கற்கும் பிள்ளைகளுக்கு முதல் வகுப்பிலேயே ஜ, ஷ, ஸ, ஹ போன்ற எழுத்துக் களைப் புகுத்தி அவர்களுக்கு அவையும் தமிழ் எழுத்தோ என்ற மயக்கத்தை உண்டு பண்ணுகின்றனர். ஆயினும் அம்முறை மரபொடு பொருந்தாத ஒன்றானமையின் சிறக்க

வெற்றி பெறவில்லை என்பதை உணர்கிறோம். -

இவ்வாறு மொழியின் திறமும் மரபும் கெடாத வகையில் அதைக் கட்டிக்காத்த தொல்காப்பியர் பல நல்ல எல்லைகளை வகுத்துள்ளார். அவற்றைப் போற்று வதனாலேதான் இன்றளவும் தமிழ் தனித்தியங்கும் திறம் பெற்றுள்ளது. . - -

சொற்களின் பொருளையும் பிறவற்றையும் முன்னே *சொல்லிய ஆசிரியர், அவற்றைப் பயன்படுத்தும் இடங் களையும் சுட்டத் தவறவில்லை. எனவே அவற்றுள் ஒன்றனை மட்டும் காணலாம். .

ஈயென் கிளவி இழிந்தோன் கூற்றே (எச்ச. 49) தாவென் கிளவி ஒப்போன் கூற்றே (எச்ச. 59)
கொடுவென் கிளவி உயர்ந்தோன் கூற்றே

- - (எச்ச. 51)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/178&oldid=684572" இலிருந்து மீள்விக்கப்பட்டது