பக்கம்:தாய்மை.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியர் காட்டும் மரபுநெறி 177

இந்த மூன்று சொற்களும் ஒரே பொருளைக் குறிப்பனவாக அமைந்த போதிலும் அவற்றை இடமறிந்து பயன்படுத்தும் வகையினையும் அதனால் விளையும் பயனையும் யாரும் வியவாதிரார்! இது செய் அது செய்’ என்று நாம் ஏவலில் பலரை ஆற்றுப்படுத்துகிறோம். ஆயினும் அது சிறந்த தாகாது என்பதையும் செய்” என்பதை விடச் செய்யாய் என்று சொல்வது செயல்படச் சிறக்கும் என்பதையும் சுட்டு கிறார் தொல்காப்பியர். செய்” என்பது எங்கோ தேவையற்ற இடத்தில் ஒரளவுதான் பயன்படவேண்டும். என்ற கருத்தினை, ஆகிட னுடைத்து. என்றதனால், செய்யாய் என சறு கெடாது நிற்றலே பெரும்பான்மை என்பதாம் என விளக்குவர் சேனாவரையர். இத்தகைய மரபுநெறிகள் பலப்பல. -

இத்தனை மரபுகளை எழுத்திலும் சொல்லிலும் வரையறுத்த தொல்காப்பியர் இறுதியில் புறனடைச் சூத்திரமாக, - - -

‘ செய்யுள் மருங்கினும் வழக்கியல் மருங்கினும்

மெய்பெறக் கிளந்த கிளவி யெல்லாம் பல்வேறு செய்தியின் நூல்நெறி பிழையாது சொல்வரைக் தறியப் பிரித்தனர் காட்டல்’

(எச்ச. 68) என விளக்கிக் காட்டியுள்ளார். தாம் கூறியதாக மட்டு: மன்றி, யாண்டும் சுட்டுவது போன்று, இந்தப் புறனடைச் சூத்திரத்திலும் நூல்நெறி பிழையாது’ என, அவருக்கு. முன்னே வாழ்ந்து மரபுநெறியினை வரையறுத்த அகத்தியர் போன்ற பெரும்புலவர் தம் நூல்களின் வழியும் அவை காட்டும் மரபுவழியும் நின்று இருவகை வழக்கிலும் சொற். களை எடுத்தாள வேண்டிய நிலையினையும் அதனால் மொழி நலம் பெறு நிலையினையும் சுட்டிக் காட்டிப் பிறகு பொருளதிகாரத்தைத் தொடங்குகிறார் -.

பொருளதிகாரம் என்பது மக்கள் வாழ்வியலாகும்: இந்த இலக்கண மரபு எந்த மொழியிலும் காணாத ஒன்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/179&oldid=684573" இலிருந்து மீள்விக்கப்பட்டது