பக்கம்:தாய்மை.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியர் காட்டும் மரபுநெறி’ 17.9

இயற்கையினையும் அதன் மாற்றங்களையும் முதற் பொரு வளாகவும், அந்த இயற்கைச் சூழலோடு பொருந்திய வினை பொருள் முதலியவற்றையும் பிறவற்றையும் கருப்பொரு ளாகவும், அவ்வந்நிலத்து ம க் களு க் கே உ ரி ய ஒழகலாற்றினை உரிப் பொருளாகவும் காட்டுவர் தொல்காப்பியர். இவற்றின் பெயரமைப்பு முறை, வரையறுத்த காலநிலை, அவற்றால் விளையும் சூழல், பயன் முதலியவற்றைக் கூறும் ஒவ்வொரு சூத்திரமும் தமிழ்ச் சமுதாயத்தின் வாழ்வியல் மட்டுமன்றி உலக சமுதாயத்தின் வாழ்வியல் மரபினையே காட்டுவதாகும். இதில் சுட்டப்பெறும் மக்கள் எவ்வெவ்வாறு யார் யாருடன் பேசவேண்டும் என்பதற்குக்கூடக் காரணமும் மரபுநெறியும் காட்டப் பெறுகின்றன. அவரவர் திறனும் தொழிலும் செயல் முறையும் கூடச் சுட்டப் பெறுகின்றன. பிறரிடம் பேசுதல், தானே பேசுதல், உளத்தொடு உசாவுதல் போன்ற வாழ்வியற் படங்கள் நன்கு காட்டப் பெறுகின்றன. அவற்றுள் தோன்றும் வெளிப்படைப் பொருட்கள் குறிப்புப் பொருட்கள் பற்றிய மரபும் காட்டப் பெறுகின்றது. இவ்வாறாய மரபு நெறிகளையெல்லாம் மனிதன்-சிறப்பாகத் தமிழன் நன்கு போற்றாத காரணமே உலகிலும் நாட்டிலும் பல்வேறு சிக்கல்கள் உண்டாகக் காரணமாக அமைகின்றது. ஒத்த காதலர் வீட்டில் வேறு பாடற்று இயைந்து வாழுதற்குரிய மரபு நெறி தொடங்கி, நாட்டிலும் உலகிலும் பல்வேறு சமுதாயங்களும் நாட்டு மக்களும் இயைந்து வேறுபாடற்று வாழும் நெறி வரையில் மரபுநெறி கடவாது அமைய வேண்டிய நிலைகள் அனைத்தும் இப்பொருளதிகாரத்தில் சுட்டப் பெறுகின்றன. இனியாகிலும் இ த் தொல் கா ப் பி ய மரபு தெறி வாழ்வு மேற்கொள்ளப் பெறின் வீடும் நாடும் உலகமும் இன்பத்தில் திளைத்து ஏற்றமுறும். இன்றேல்

aurrgraffatri ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/181&oldid=684576" இலிருந்து மீள்விக்கப்பட்டது