பக்கம்:தாய்மை.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 தாய்மை

தொல்காப்பியர் இப்பொருளதிகாரத்தில் காட்டும் வாழ்க்கையின் மரபு நெறிகளை ஒவ்வொன்றாகச் சுட்டிக் காட்டுதல் எளிதன்று. மொத்தமாகக் கூறின் இவ்வதி காரத்து ஒவ்வொரு சூத்திரமும் மரபு நெறியை விளக்கு வதே யாகும் என உணர வேண்டும். சூத்திரங்களையும் அவற்றிற்கு ஆய்ந்த புலமை மிக்க உரையாசியர்கள் கண்ட உரைகளையும் பயிலுவார் இவ்வுண்மையினை உணர்வார் என்பது தேற்றம். அவற்றின் சிறப்பியல்பு களையெல்லாம்-பேச்சு, குறிப்பு, சுட்டுதல், தெளிதல், வினை, பயன் போன்றவை அனைத்தையும் அவற்றின் மரபு நெறிகளையும் அங்காங்கே அறிந்து மகிழ வேண்டும் என்று மட்டும் ஈண்டு என்னால் சுட்டமுடிகின்றது.

தொல்காப்பியர் அகம், புறம் என்ற இரண்டு மரபினையும் சமுதாயத்தின் மாசற்ற வாழ்வுக்கெனவே அமைத்தார். மேலும் அவை அனைத்தும் உயிரினம் வாழும். கால முழுதும் தேவை என்ற் உண்மையின்னத் தான், அகத்தின்ன புறத்தினை அனைத்தையும் விளக்கும். நெறியெலாம் விளக்கி, இறுதியாகச் பொருளியல் கடைசிப்

‘’ இமையோர் தேஎத்தும் எறிகடல் வரைப்பினும்

அவையல் காலம் இன்மை யான’ (பொருள். 52) என்று காட்டி, யாண்டும் இந்தப் பொருள் மரபன்றிவாழ்வியல் மரபன்றி வேறு மரபே இல்லை என்பத்ைத் திட்டமாகச் சுட்டுகிறார். இச் சூத்திரத்திற்கு உரையாசிரி யர்களெல்லாம் சுருக்கமாகவே பொருள் கூறிச் சென்றார் களென்றாலும், தொல்காப்பியர் இந்த இரண்டு அடிகளில் தான் உலக வாழ்வியல் மரபு நெறியின் கூறுபாடுகளை அவையெனச் சுட்டி, அவை உலகிடத்தும் அப்பால் மனிதன் வாழ நினைக்கும்-ஒரு வேளை வாழப்போகும் வளிவழங்கா அப்பாற்பட்ட நிலத்தும்-பிறவிடங்களிலும் எக்காலத்திலும் மரபு பற்றி வாழ வேண்டியனவே எனச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/182&oldid=684577" இலிருந்து மீள்விக்கப்பட்டது