பக்கம்:தாய்மை.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியர் காட்டும் மரபுநெறி 18

சுட்டிக்காட்டுகிறார் எனக் கொள்ளல் வேண்டும். இச் சூத்திரத்துக்கு மு ன் ன தா. க வெளிப்படையாகக் காட்டலாகா நிலையில்-நெஞ்சால் கொள்ளத்தக்க மரபு நெறி பற்றியவற்றைச் சுட்டி, அவை காட்டலாகாதன வாயினும் அவையே வாழ்வை வகுக்கும் ஒழுகலாறுகள் என்னும் மரபினையும் நன்கு விளக்குகிறார். “நாட்டிய மரபின் நெஞ்சுகொளின் அல்லது, காட்டலாகப் பொருள் என்ப” (பொருள். 51) என்பது தொல்காப்பியம். எனவே தொல்காப்பியர் வாழ்விடையே புறத்தே தோன்றும் நிகழ்ச்சிகளின் மரபுகளை மட்டுமன்றி, அந்நிகழ்ச்சிகளுக்கு அடிப்படையான உள்ள நிகழ்ச்சிகளை யும் பிறவற்றையும்கூட மரபுகெடாமல் கட்டிக் காக்க வேண்டும் என வற்புறுத்துகின்றார். மெய்ப்பாட்டியல் போன்றன. அவை பற்றி விளக்க வந்த மரபு நெறி போற்றுவனவே. இவற்றின் விரிவை யெல்லாம் நூவில் கண்டுகொள்க.எனக் காட்டி மேலே செல்கிறேன்.

மொழியின் அடிப்படையான எழுத்து, சொல். இவற்றைக் கூறி, அவை வழங்குதற்கு அடிப்படையான வாழ்வின் நெறிகளையும் கூறிய தொல்காப்பியர், . பின் அவ்வாழ்வினை விளக்கும் இலக்கிய மரபினை எண்ணிப்பார்க்கிறார். அந்த எண்ணத்திலேயே பின் உவம இயலும் செய்யுளியலும் உருவாகின்றன. யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பாட்டிசைக் கலாமென்றும் எப்படி வேண்டுமானாலும் பொருள்களைப் பிணைத்துக் காட்டலாம் என்றும் இன்று நம்மில் சிலர் பேசியும் எழுதியும் வந்த போதிலும்கூட, அவர்தம் வழக்காறுகள் வழியற்று வகையற்றுக் கெட்டொழி. வதையும் தொன்மை மரபு நீறுபூத்த நெருப்பாக இருந்து, தேவையுற்றபோது சிறந்து விளங்குவதையும் நாம் காண்கிறோம். செய்யுளியல் இறுதிச் சூத்திரத்தில் தொல்காப்பியர் பிழைத்தன போல வருவனவற்றை

I 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/183&oldid=684578" இலிருந்து மீள்விக்கப்பட்டது