பக்கம்:தாய்மை.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 82 - தாய்மை

மரபு படுத்துக என்றும் அவற்றையும் திரிபின்றி முடிக்க வேண்டும் என்றும் கூறுகின்றாரே ஒழியப் பிழைத்தன வற்றை மரபுபடுத்தச் சொல்லவில்லை. இதை அறியாத சிலர் தொல்காப்பியரே விதிவிலக்கு அளித்துள்ளார்; எனவே எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் எனக் கூறுவர். அக் கூற்றுத் தவறான ஒன்றாவதோடு, அக் கூற்றின் வழி அவர்கள் எழுதும் எழுத்தெல்லாம் அவர் காலத்திலேயே அழிவதையும் காண்கின்றோம். இதோ தொல்காப்பியர் காட்டும் மரபு.

செய்யுள் மருங்கின் மெய்பெற காடி இழைத்த இலக்கணம் பிழைத்தன போல வருவன உளவெனும் வந்தவற் றியலால் திரிபின்றி முடித்தல் தெள்ளியோர் கடனே’

(செய். 225)

இனி, தொல்காப்பியர் தம் மரபியலில் சுட்டும் ஒருசில நெறிகளைச் காட்டிக் கட்டுரையை முடிப்போம். இம் மரபியலை வாழ்வின் தொடக்கத்தோடே-கு ழ ந் ைத ப் பருவத்தோடே தொடங் கு.கி ன் றார். இச்சூத்திரம் இளமைப் பெயராமாறு உணர்த்துதல் துதலிற்று’ என்பர் இளம்பூரணர். ‘மரபென்ற பொருண்மை என்னையெனின். கிளவியாக்கத்து மரபென்று வரையறுத்து ஒதப்பட்டனவும் செய்யுளியலுள் மரபென்று ஒதப்பட்டனவு மன்றி இருதினைப் பொருட்குணனாகிய இளமையும் ஆண்மையும் பெண்மையும் பற்றிய வரலாற்று முறைமையும், உயர்திணை நான்கு சாதி ப ற் றி ய மர பும், அஃறிணைப் புள் ளு ம் ம ர னும் ப ற் றி ய மரபு ம், அ ைவ பற்றி வரும் உலகியல் மரபும், நூல் மரபும் என இவையெலாம் மரபெனப்படும் என்பது’ எனப் பேராசிரியர் மரபுநெறி'க்கு இலக்கணம் வகுத்து உரை விளக்கம் தருகிறார். இதில் ஆசிரியர் தொல்காப்பியத்தின் முதல் இயலாகிய நூன் மரபு தொடங்கிக் கடைசி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/184&oldid=684579" இலிருந்து மீள்விக்கப்பட்டது