பக்கம்:தாய்மை.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோல்காப்பியர் காட்டும் மரபுநெறி 183

இயலாகிய மரபியல்’ உட்பட அனைத்துமே மரபுநெறி பற்றி வருவன என்பதை நன்கு சுட்டிக் காட்டிவிட்டார். ‘அவை பற்றி வரும் உலகியல் மரபும் நூன்மரபும்’ எனக் குறித்தமை உலகியல் பற்றி எழுதும் நூல்மரபு மட்டு மன்றித் தொல்காப்பியர்தம் முதல் இயலாகிய நூலுக்கும் பிறவற்றிற்கும் அடிப்படையான எழுத்ததிகார நூல் மரபினையும் கொள்ளல் வேண்டும். பொருளதிகார முதல் இயலாகிய கிளவியாக்கத்தை வெளிப்படையாகவே சுட்டுகிறார். பிறவற்றையும் நன்கு காட்டுகிறார். எனவே நான் ஆங்காங்கே சுட்டிக் காட்டியபடி தொல் காப்பியம் முழுதுமே மரபுநெறி’ போற்ற எழுந்த நூல் எனக் கொள்ளல் வேண்டும். . •

இம் மரபியலில் ஆசிரியர், மக்கள் பிற உயிர்களின் பெயரமைப்பு முதலியவை எவ்வெவ்வாறு மரபு நெறி பற்றி வழங்கப்பெறல் வேண்டும் எனக் காட்டுகிறார். நாம் முன்னமே கண்டபடி எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே என்ற அடிப்படையில் இவை அன்ைத்தும் அமை வதாகக் கொள்ளல் வேண்டும். நமக்கு, இன்று பல்வேறு, காரணங்களாலும் சூ ழ ல் களாலு ம், அப்பெயர்களின் காரணங்கள் புரி யா து மறைந்தாலும், தொல் காப்பியர் மரபுநெறிப்படி அவை காரணத்தோடு பொருந்தியவை என்றே கொள்ளத் தகும். -

மனிதனை மட்டுமன்றிச் சாதாரண விலங்கு, பறவை முதலியவற்றையும்கூட இந்த மரபு நெறியில் வழங்க வேண்டும் என்பது ஒருவேளை சிலருக்குச் சாதாரணமாகத் தோன்றினும், அப்பொருள்களின் இடையேதான் வாழ்வே அமைந்துள்ளமையின்-அவை யின்றேல் உலக வாழ்வே.உயிரியக்க வாழ்வே இல்லையாகவே நிலைகெட்டே போகுமாதலின் தொல்காப்பியர் இவற்றைத் திட்டமாக வற்புறுத்துகிறார். முதற்பகுதியாக இளமை பற்றிக் குறிப்பிடும் பெயர்களையும் ஆண், பெண் வேறுபாடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/185&oldid=684580" இலிருந்து மீள்விக்கப்பட்டது