பக்கம்:தாய்மை.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘I 84 - ‘தாய்மை,

காட்டி வழங்கும் பெயர்களையும் அவர் வரிசைப்படுத்திக் காட்டும்போது, அந்தத் தமிழ்மரபு நெறியும் அதைப் போற்றிய வகையும் தொன்மையும் எண்ண எண்ண நம்மை வியக்க வைக்கும் என்பது உறுதி. விலங்குகளிலும் பறவைகளிலும்கூட-அஃறிணையாயினும்- ஆண் பெண் வேறுபாடு உணர்த்தும் வகையில் பெயர் வழங்கும் மரபினை நாம் காண முடிகின்றது. சில மொழிகள் ஒரு. பொருளுக்கு ஆண், பெண், உணர்திணை, அஃறிணை என வேறுபாட்டு நிலையில் பெயர்கள் வழங்கும் வகையினைக் காணும் நமக்கு இந்த மொழி மரபுநெறி அதன் தொன்மை யினையும் செம்மையினையும் வரையறுத்துக் காட்டவும்: பயன்படுகின்றதன்றோ?

“ பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற் றிளமை ‘’ -

  • தவழ்பவை தாமும் அவற்றோர் அன்ன ‘’

- - (மரபு. 5). ‘ காயே பன்றி புலிமுயல் கான்கும்

ஆயுங்காலை குருளை என்ப” (மரபு. 8). * யாடும் குதிரையும் கவ்வியும் உழையும்

ஒடும் புல்வாய் உளப்பட மறியே ‘ (மரபு. 12).

  • யானையும் குதிரையும் கழுதையும் கடமையும்

மானொ டைந்தும் கன்றெனற் குரிய

. . (மரபு. 15). என்ற சூத்திரங்களும் இவற்றொடு இணைந்தனவும் அஃறிணைப் பொருள்களாகிய விலங்கு பறவை முதலிய வற்றையும் அவற்றின் இளமை நிலையினையும் பெயரள வானே அறிந்துகொள்ளும் வகையில் மரபுச் சொற்கள்

உள்ளமைன்யத் தெள்ளத் தெளியக் காட்டுகின்றன.

உயிரினத்தின் வளர்ச்சியையும் அதனொடு பொருந்திய அறிவியலின் வளர்ச்சியையும் உணர்த்தும் ஆண்பெண் வேறுபாடுகளைப் பெயரொடு சார்த்திக் காட்டும் மரபு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/186&oldid=684581" இலிருந்து மீள்விக்கப்பட்டது