பக்கம்:தாய்மை.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியர் காட்டும் மரபுநெறி 185

நெறியும் எண்ணத்தக்கது. அப்படியே மக்கள் சமுதாயம் கொள்ளும் பல்வேறு வேறுபாட்டு நிலைகளும் பிறவும் பேசப் பெறுகின்றன. இவ்வாறே ஓரறிவுயிர்களின் வேறு பாடுகளையும், புல் மரம் போன்றவற்றின் தன்மைகளையும் அவற்றின் கா ய் கனிகளையும் . பிறவற்றையும் காட்டிய தொல்காப்பியர் கடைசியாகத் திரிவில் சொல்” கொண்டு வழங்கும் மரபு நெறியைக் காட்டுகிறார். -

கிலம்தி நீர்வளி விசும்போ டைந்தும் கலந்த மயக்கம் இவ்வுலக மாதலின் இருதிணை ஐம்பால் இயனெறி வழாமைத் திரிவில் சொல்லொடு தழாஅல் வேண்டும் ‘

- (மரபு. 91)

என்ற சூத்திரம், இன்றைக்கு மட்டுமன்றி மனித சமுதாயம்

வாழும் வரையில் என்றென்றைக்கும் மரபுநெறியை எண்ணிப் போற்றிப் பொருள் கண்டு வாழ வைக்க

வேண்டிய ஒரு சூத்திரமாகும். -

பின் இம் மரபுநிலை திரியின் பிறிது பிறிதாகும்’ எனவும் வேறு வகையில் திரியாது மரபு காக்க வேண்டிவ கடமையினையும் அக் கடமைவழி முன்னோர் இயற்றிய நன்னூல்களைப் போற்ற வேண்டிய நிலையினையும். அவற்றின் உறுப்புக்களையும் பிறவற்றையும் கூறித் தம் .நூலைத் தொடங்கி, அந்நூல் பற்றிய விளக்கங்களை இறுதி யாக வைத்து இருபத்தேழு இயலிலும் தொல்காப்பியர் காட்ட நினைத்தது-வாழ வைக்க வழி வகுத்தது-மரபு. நெறி ஒன்றேயாம். ஆம்! அந்த மரபு நெறி போற்றிக் காக்கவேண்டியது மக்கள் கடன்; தொல்காப்பியருக்குஎன்றும் வாழும் பெருநூலை எழுதிய அப் பெரியவருக்குநாம் காட்டும் நன்றிக்கடன்! - -

தொல்காப்பியம் முழுதும் மரபு நெறி பற்றியது என்பதை நாம் உணர்ந்து எழுத்து, சொல், பொருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/187&oldid=684582" இலிருந்து மீள்விக்கப்பட்டது