பக்கம்:தாய்மை.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. மணிமேகலை

•நிர்வாண்” மன்ற உறுப்பினர்களே! தலைவர் மாண்பு மிகு உயர்நீதிமன்ற நடுவர் அவர்களே! பெரியோர்களே! தாய்மார்களே! - -

இந்தத் திங்களிலே என்றும் செயலாற்றுவது போல “வாழ்க்கை” என்ற தலைப்பிலே, பெளத்த சமயத்தைச் சேர்ந்த நான்கு மகளிரை உலகுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று நடுவர் அவர்கள் எப்பொழுதும் குறிக் கின்ற வகையிலே இங்கே குறித்திருக்கின்றார்கள். இதற்கு முன்னே முக்குணங்களைப் பற்றிப் பேசியபொழுது, தமோகுணத் தன்மையைப் பற்றித்தான் நான் இங்கே பேசினேன். இப்பொழுது மணிமேகலையைப் பற்றிப் பேச இருக்கிறேன். - - -

இந்தத் திங்களின் நான்கு நிகழ்ச்சிகளிலே ஒருவர் புத்தனைப் பெற்ற தாய்; மற்றவர் அவருடைய துணைவி யார்: அவருடைய வாழ்க்கையை நமக்காகத் தியாகம் செய்தவர். அடுத் த வாரம் பேச்சுக்கு உரியவர். அசோகருடைய மகளார். தமிழ்நாட்டு எல்லை வரை பிலே வந்து, இலங்கை வரையிலே சென்று, கதிர்காமத் திலே அவருடைய படிவத்தினை இன்று நாம் போற்றுகின்ற வகையிலே, நிறுவியிருக்கின்ற ஒரு தன்மை உடையவர்கள். கதிர்காமத்திலே அவருடைய உருவமும் அவருடைய சகோதரியின் உருவமும் இருப்பது இங்கே பலருக்குச் இப்போது தெரிய வழியில்லை. ஒரு தரம் கதிர்காமத்தை நேரில் சென்று கண்டு வந்தால் நிச்சயமாக அந்த உண்மையை அறிந்துகொள்ள முடியும். ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/189&oldid=684584" இலிருந்து மீள்விக்கப்பட்டது