பக்கம்:தாய்மை.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 தாய்மை

கதிர்காமத்திலே நாம் வழிபடுகின்ற முருகனின் உருவம் நமக்குத் தெரியாது. வெளியில் தேங்காயையோ பழத்தையோ, கற்பூரத்தையோ கொடுகின்றோம், உள்ளே சென்று அதை உடைத்துப் பூசை செய்துகொண்டு வந்து நமக்குக் கொடுக்கிறார்கள். அப்படிக் கொடுக் கின்றவர் முழுக்க முழுக்கப் புத்த சமயத்தைச் சேர்ந்தவர். அந்தச் சன்னதிக்குப் பின்னாலேயே போதிமரமாகிய அரச மரமும் இருக்கிறது. புத்த தேவனுடைய பாதார விந்தங்கள் இருக்கின்றன. சைவர்கள் உட்பட ஆயிரக் கணக்கான புத்தர்கள் வந்து அதனை வழிபட்டுக் கொண்டு தானிருக்கிறார்கள். -

கோயிலுக்குப் புறத்திலே இந்த இரண்டு சகோதரி களுடைய சிறுகோயில்கள் இருக்கின்றன. அவற்றை நாமெல்லாம் வள்ளி, தெய்வயானை’ என்று வழிபடு கின்றோம். புத்தசமயத்தவர் அசோகருடைய மக்களாகப் போற்றி வழிபடுகின்றார்கள். ஆகவேதான், அடுத்த வாரம் உங்கள் முன்னே திற்கப் போகின்ற அம்மையார், தமிழ்நாட்டு எல்லையைக் கடந்து, கதிர்காமம் வரை சென்று, தம் சமயத்தைப் பரப்பியவர் என்று சொன்னேன்.

அவர்கள் கி. மு. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத் திலோ கி.மு. நான்காம் நூற்றாண்டின் இறுதியில்ோ தமிழ் நாட்டிற்கு வந்திருக்க வேண்டும். கலிங்க நாட்டுப் போரிலே முற்றும் மனம் திருந்திப் புத்த சமயத்தை தாடெங்கும் பரப்ப உறுதி கொண்ட அசோகர் தம்மை மட்டுமல்லாது, தம் மக்களையும் மற்றவர்களையும் அதே பணியில் ஈடுபடுத்திய காரணத்தினாலே, கிருஷ்ணை, வட பெண்ணை ஆற்றங்கரையிலே போரிலே வெற்றி கொண்ட போதிலும், தமிழ் நாட்டிலேயும், இலங்கையிலேயும் அன்பினால் வெற்றி கொள்ள நினைத்தார். இலங்கை யிலே ஓரளவு வெற்றி பெற்றார் என்றாலும் கூடத் தமிழ் நாட்டிலே, அவர்கள் வெற்றி பெறவில்லை என்றுதான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/190&oldid=684586" இலிருந்து மீள்விக்கப்பட்டது