பக்கம்:தாய்மை.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிமேகலை , 189

சொல்ல வேண்டும். அவர்கள் வெற்றி பெற்று இருந்திருப் பார்களேயனால், கடைச்சங்க கால நூல்களிலே புத்த சமயத்தைப் பற்றிய குறிப்புகள் அதிகமாக வந்திருக்க வேண்டும். அங்கே புத்த சமயத்தைப் பற்றிய ஒரு குறிப்பும் கிடையாது. •

இரண்டொருவர் புத்த சமயப் பெயருடையவரோ என்று எண்ணுமாறு சங்க இலக்கியப் புலவர்கள் இருக் கின்றார்கள். ஆனால் சைவ, வைணவத் தெய்வங்கள், இராமாயணம், பாரதம் போன்ற வடநாட்டுக் கதைகள் எல்லாம் சங்க இலக்கியத்திலே அதிகமாக வருகின்றன. பாரதப்போரிலே சோறளித்த காரணத்தினாலே, பெருஞ் சோற்றுதியன் சேரலாதன் என்னும் பெயர் பெற்ற சேரனிருக்கிறான். ஆகவே புத்த சமயம் தமிழ்நாட்டிலே கால்கொண்ட காலம் கி. பி. முதல் நூற்றாண்டின், இடைப்பகுதி, இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கம் என்றுதான் கொள்ள வேண்டும்.

ஏறக்குறைய அந்தக் காலத்திலே வாழ்ந்தவர்தான் இன்றைய பேச்சின் தலைவியாக இருக்கின்ற மணிமேகலை அவர்கள். அன்றைய நாட்டின் நிலை எண்ணிப் பார்க்க வேண்டிய ஒன்று. அப்போது பிக்குனி என்று ஒரு சொல் வழக்கில் உள்ளது. பிக்குணி என்றால் பிச்சை ஏற்று உண்பவர்கள் என்ற ஒரு பொருளைத்தான் நாமறிவோம். உளத்துறவு பற்றி மணிமேகலையிலே குறிப்பிடும்போது, மனப்பாட்டறம் என்று சாத்தனார் கூறுகின்றார்: இம் மனப்பாட்டறத்தின் வழியே உளத்துறவு பெற்றுச் செயலாற்றுகின்றவர்தாம் நிர்வாண்’ என்ற நிலைக்கு 1உரியவர்கள்.

அப்படியே, பிக்குணி என்பவர்கள் பிச்சை ஏற்பார்கள். தங்களுக்காக அல்ல தரணிக்காக. நாம் யார், யான்ரயோ பார்த்துப் பாடிப் பரவிப் பேசிப் புகழ்ந்து, கொடுப்பதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/191&oldid=684587" இலிருந்து மீள்விக்கப்பட்டது