பக்கம்:தாய்மை.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.96 தாய்மை

வாங்கி வருகிறோம். இல்லாவிட்டால் திட்டிவிட்டு வருகின்றோம்.

கல்லாத ஒருவனை நான் கல்லாய் என்றேன் காடறியு மவனை நாடாள்வாய் என்றேன். பொல்லாத வனை கல்லாய் என்றேன் போர் முகத்தை அறியானைப் புலியே என்றேன் . என்றெல்லாம் பாடிப்பாடி அவமாகக் காலம் கழிக் கின்றோம். அவர் கொடுக்கின்ற பிச்சையை வாங்கிக்கொள் கிறோம். உண்மையான பிக்குணிகள் பிச்சையெடுத்தார் கள், மணிமேகலையும் பிச்சையெடுத்தாள் என்றால் அது நாடு வாழ, நானிலம் வாழ, நல்லவர்கள் என்றென்றும் வாழ எடுத்த பிச்சையாகத்தான் இருக்கவேண்டும்.

பெரியோர்களே! இவருடைய காலம் இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கம் என்று சொன்னேன். சிலர் . இவர் அந்தச் சமயத்தைச் சேர்ந்த வேதவியாசர், கிருத கோடி முதலியவர்களை எல்லாம் குறிக்கின்ற காரணத் தினாலே அவர்கள் காலம் நான்கு, ஐந்தாம் நூற்றாண்டாகக் கொண்டு அதற்குப் பிற்பட்டவர் இவர் என்று வாதிடலாம். ஆனால் கனகசபைப் பிள்ளை அவர்கள் திட்டமாக, வேதவியாசர் காலத்தையும் கிருத கோடி காலத்தையும் இரண்டாம் நூற்றாண்டின் இடைப் பட்ட தொடக்கக் காலம் என்று சொல்லி, ஏறக்குறைய அதே காலத்தில் வாழ்ந்தவர் மணிமேகலை என்பதை நிறுவியிருக்கிறார்கள். தக்க ஆதாரங்களோடு. இதே கருத்தைத்தான் மணிமேகலையை மொழிபெயர்த்த டாக்டர் போப் அவர்களும் காட்டியிருக்கிறார்கள். ஆகவே, இந்த வரலாறு இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடந்த வரலாறு என்று கொள்ள வேண்டும். - -

மற்றொரு முக்கியமான சான்று, கண்ணகிக்குக் கோயில் எடுத்தான் செங்குட்டுவன். அந்த விழாவிற்குப் பலர் வந்திருந்தார்கள். . ; : “ ‘

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/192&oldid=684588" இலிருந்து மீள்விக்கப்பட்டது