பக்கம்:தாய்மை.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிமேகலை - 19i

அருஞ்சிறை நீங்கிய ஆரிய மன்னரும் பெருஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னரும் குடகக் கொங்களும் மாளுவ வேந்தரும் கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தரும் எக்காட் டவரும் இமய வரம்பன் கன்னாள் செய்த காளணி வேள்வியில் வந்தி கென்றே வணங்கினர் வேண்ட” - - தந்தேன் வரம் என்று எழுந்தது ஒரு குரல் என்பது சிலப்பதி: காரம். அதில் முக்கியமானது கடல் சூழ் இலங்கைக் கயவாகு மன்னன். வத்தான் என்பதுதான். அவனுடைய காலத்தை, இலங்கை வரலாற்றைக் கூறும் மகாவமிசம் வரையறுத்துக் கூறுகின்றது. அதன் அடிப்படையிலேயும் இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலே கண்ணகி. கோவலனோடு சுவர்க்கம் புகுந்தாள் என்னும் குறிப்பு: வருகிறது. எனவே, இரண்டாம் நூற்றாண்டின் இடைப் வட்ட தொடக்கக் காலம் தான் மணிமேகலையும். அவள் அன்னையாகிய மாதவியும் வாழ்ந்த காலம் என்று: கொள்ளுதல் பொருத்தமானது. .

அந்தக் காலத்திலே பெளத்தம் நாட்டிலே நிச்சய மாகத் தழைத்தோங்கியிருந்தது. சங்க காலத்திலே, ஓங்காத பெளத்தம் மணிமேகலையாலே, அவரை உலகத் திற்கு அறிமுகப்படுத்திய அறவண அடிகளாலே வளர்ந்தது. என்று கொள்வது பொருத்தமானதாகும். ஆனால் நான்காம் நூற்றாண்டிலே, அதைப் பின்பற்றி வடக்கே. ‘யிருந்து வந்த சமணம் மேலோங்க, பெளத்தம் தலைசாய்ந்துவிட்டது. அதற்குப் பிறகு தமிழ்நாட்டிலே தலை துக்கவே இல்லை. ஆனால் அண்டைநாடாகிய இலங்கை யிலே, அன்று மட்டுமல்லாது இன்றும் வாழ்ந்து வளர்கின்ற, நிலையிலே சிறந்து விளங்குகின்றது. .

அங்கே இருக்கின்றது கண்டி என்கின்ற ஊர். கண்டி” என்பது சிங்களத்தில் பல் என்று பொருள்படும். புத்தர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/193&oldid=684589" இலிருந்து மீள்விக்கப்பட்டது