பக்கம்:தாய்மை.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 தாய்மை

பெருமானின் புல்லைக் கொண்டு அதைப் போற்றும் கோயில் கட்டியதால், அப்பெயர் பெற்றது. இலங்கையின் தென்கோடியிலுள்ள ஓர் உயர்ந்த மலையை, புத்த பெருமானின் பாதங்கள் இருப்பதாகவே நினைத்துப் போற்றி வழிபடுகிறார்கள். சைவர்கள் அதனைச் சிவனடிபாதமலை என்று சொல்கிறார்கள். கிறித்துவர்கள் --si samar “-gl-siv f“ (Adam’s peak) srair pl சொல்கிறார் கள். ஆக அந்த அளவிலே பெளத்தம் அங்கே வளர்கிறது.

அந்த மணிமேகலை, மணிமேகலா தெய்வத்தின் மூலம் இரவிலே மணிபல்லவத் தீவிற்கு எடுத்துச் சொல்லப்பட்ட வரலாற்ற்ைக் கதையிலே இரண்டாம் அங்கமாகக் காண் கிறோம். அந்த மணி பல்லவத் தீவிலே நான் சென்று நின்றபோது உண்மையாகவே என்னை மறக்கவேண்டிய நிலை உண்டாயிற்று. அதே பெயரிலே மணிபல்லவம்’ என்கின்ற நூலையும் எழுதியிருக்கின்றேன். புத்தர் பள்ளம் இருக்கிறது. ஆனால் அது பொதுவுடைமையாக இல்லை. நம் நாட்டில் கோயில், அரசுடைமை எல்லாம் சொந்தக் காரர் உடைமை ஆவதுபோல, கோமுகிப்பொய்கை தனி யொருவர் உடைமையாக இருக்கிறது. இருந்தாலும் அர சாங்கம் அதனை வேலியிட்டு, புத்த பள்ளம் என்று பெயரிட்டு, அதுதான் கோமுகிப் பொய்கை என்று காட்டு கிறது. இன்று அத்தீவிற்கு நாகத் தீவு என்று பெயர் (நான் சொல்வது முப்பது ஆண்டுகளுக்கு முன்).

பக்கத்தில் புத்த பீடிகை இருந்த இடத்தை, மிகப் பெரிதாகக் கட்ட, அதை நாள்தோறும் ஆயிரகணக்கான பெளத்தர்கள் சென்று வழிபடுகிறார்கள். அதே தீவிலே நாககன்னிகைக் கோயில் இருக்கிறது. அதைப் பற்றியும் மணிமேகலையில் வருகிறது. நாக நாட்டரசர் இருவர் எமது, எமது என்று புத்த பீடிகையைச் சொல்ல, அதனைப் பெளத்தர் இது உமது அல்ல. எமது’ என்று ஏற்றுக் கொண்ட வரலாறு மணிமேகலையில் வருகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/194&oldid=684590" இலிருந்து மீள்விக்கப்பட்டது