பக்கம்:தாய்மை.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிமேகலை 193:

தாககன்னிகைக் கோயிலும் சிறப்பாக அமைந்து அழகாகப் பிரம்மோற்சவமும் நடைபெறுகிறது. ஆக, இந்துக்களும் சரி, பெளத்தர்களும் சரி வழிபடும் தலமாக மணிபல்லவத் தீவு இன்றும் இருக்கிறது. மணிமேகலை. குறிக்கின்றபடி காவிரிப் பூம்பட்டினத்திற்குத் தெற்கே. முப்பது காவத தூரம் இருக்கிறது. புகாரிலிருந்து, நேர்க் கோடு ஒன்று கிழித்தால் மணிபல்லத்தில் தான் சென்று நிற்போம், யாழ்ப்பாணத்திலிருந்து விசைப் படகின் மூலம் ஒரு மணி நேரத்திற்குள் சென்றுவிடலாம். அது மூன்று மைல் சுற்றளவு உள்ள ஒரு சிறிய தீவு. ஆகவே, அந்த இடத்திலே அறநெறி பெற்ற-அருள் நலம் பெற்ற, புத்த பீடிகையை வணங்கி, என்றும் பொய்யாத அமுத சுரபியைப் பெற்ற மணிமேகலையார் நம் கண்முன்னே நிற்கிறார். அவர் மாதவியின் மகள். ஆகவே மாதவி, மணி மேகலை மாதவி என்று வரவேற்றவர் Θαπασπή. ஒரளவு அது உண்மையும் கூட.

கோவலனால் புகழப்படுகின்ற மாதவி வேறு: மணிமேகலை பிறந்தபிறகு மாறிய மாதவி வேறு. ஆகவே, மணிமேகலை பிறக்கின்ற வரையிலே கணிகையர் கோலத். திலே இல்லாவிட்டாலும், கோவலனையே கணவனாகக். கொண்டு வாழ்ந்த மாதவி ஒருத்தி. மணிமேகலை பிறந்த பிறகு, , - -

“ மாதவி தன் துறவும் கேட்டாயோ தோழி

மணிமேகலைத் துறவும் கேட்டாயோ தோழி ‘ என்று இளங்கோவடிகள் பாடியபடி, முற்றும் துறவியாகி அவள் தாய் சித்திராபதியின் எந்தச் சொல்லுக்கும். இணங்காது தான் துறவியானதோடு அல்லாது தன் மகளையும் து ற வி யா க் கி ய அ ற ச் .ெ ச ல் வி ய ா க. வாழ்ந்து வந்தாள் என்ற காரணத்தினாலே, மாதவி, - மணிமேகலை மாதவிஎன்று கூறினார்கள். இந்த வரலாறு. தமிழ் நாட்டைப் பிணித்த ஒரு வரலாறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/195&oldid=684591" இலிருந்து மீள்விக்கப்பட்டது