பக்கம்:தாய்மை.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 தாய்மை


பூம்புகாரிலே பிறந்தாள்; வஞ்சியிலே பாட்டனாகிய .மாசாத்துவானையும் கண்ணகியாகிய தெய்வத்தையும். _ கண்டாள்; மதுரையிலே சிந்தாதேவி அளித்த அருமையான அமுதசுரபி ஆபுத்திரன் கையிலே ஆட, அது மணிபல்லவத் தீவில் இருக்க அதை எடுத்துப் பிறகு, காஞ்சியிலே வந்து தன்னுடைய அறத்தை முழுக்கப் பரப்பினாள்.


அவள் வாழ்ந்த தெரு இன்றும் அறப்பெருஞ்செல்வி” என்ற பெயரிலேயே காஞ்சியில் இருக்கின்றது. அவள் வருகிறாள் என்று கேள்விப் பட்டவுடனேயே அந்தக் காலத்திலே இருந்த இளந்திரையன்’ என்ற சோழ நாட்டு மன்னன் காஞ்சியிலே மணிபல்லவத்தைப் போன்று ஒரு மேடு அமைத்தான், குளம் தொட்டான்; புத்த பீடிகை உண்டாக்கினான். அத்தனையும் செய்த இடம் இப் ப்ொழுதும் மணி என்ற சொல் மறைந்து பல்லவமேடு” என்று வழக்கத்திலே இருக்கிறது. இந்த இரண்டையும் இன்று சென்றாலும் காணலாம். காஞ்சியின் பழைய வரலாற்றைக் காணுகின்ற செங்கல்பட்டு கெஸ்ஸெட்டி” யரிலே இதுபற்றிய இரண்டொரு குறிப்புகள் குறித்திருப் பதை, காஞ்சியைப் பற்றி நான் ஆராயும்போது எங்கோ படித்திருக்கிறேன். ஆகவே, மணிமேகலை வரலாறு முற்றும் கற்பனை என்றோ, கதை என்றோ வேறு வகையாக ஒதுக்கி விடச் சற்றும் நியாயமில்லை. இங்கே இதற்கு முன்னே-இருவாரங்களாய்ப் பார்த்த இருவரும், அடுத்த வாரம் பார்க்கப் போகின்ற மற்றொரு வரும் தமிழ்நாட்டிற்குப் புறத்தே வாழ்ந்தவர்கள். மணிமேகலையார் தமிழ்நாட்டிலேபிறந்து, தமிழ்நாட்டிலே அறம் வளர்த்து, தமிழ்நாட்டிலே கடைசியில் அறத்தை நிறுவி, அடுத்த பிறவிகளில் வடநாட்டிலே எல்லாம் ஆண் பிறவி எடுத்து நிர்வாணத்தினை எய்துவார் என்று _ முடிக்கிறார் சாத்தனார். அந்த வகையிலே நம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/196&oldid=684592" இலிருந்து மீள்விக்கப்பட்டது