பக்கம்:தாய்மை.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிமேகலை 195,

தாட்டில் அறம் வளர்த்த செல்வியாகத் திகழ்கிறார். மணிமேகலையார்.

ஒரு சிறு கருத்துவேறுபாடு நிலவுகிறது. இளங்கோ வடிகள் சாத்தனாருக்கு முந்தியவரா அல்லது சாத்தனார் இளங்கோவடிகளுக்கு முந்தியவரா என்று ஆரர்ய்ச்சி எல்லாம் நடக்கிறது. இரண்டு நூலையும் நன்றாகத் துருவிப் பார்க்கும்போது இருவ்ரும் ஒரே காலத்தவர் என்பதனை” அறியமுடியும். சாந்தனார்வயதில் மூத்தவராக இருக்கலாம். ஏனென்றால் கண்ணகிக்குக் கோயில் எடுப்பதற்கு முன்னே குன்றக்குறவர்கள், கண்ணகி விண்ணில் சென்றதைப் பற்றிக் கூறு ம் .ெ பா ழு து செங்குட்டுவன் அதனை அறியாது இருக்கின்றான். அருகே இருந்த சாத்தனார் :யானறிகுவன் அது நிகழ்ந்தவாற்றை’ என்று சொல்லிப் பாண்டிய நாட்டுவரலாற்றை எல்லாம் கூறுகிறார். பின் செங்குட்டுவன் வடநாட்டுக்குக் கல் எடுக்கச் செல்கிறான். அங்கே கல் எடுத்து வந்து விழா நடத்துகிறான். ஆகவே, சாத்தனார் நிகழ்ச்சியை மதுரையிலே கண்டவர். விழா எடுக்கும் போது இருந்தவர்; விழாவுக்குப் பின்னாலே மணிமேகலையின் துறவுநிலை எல்லாம் கண்டவர். இதிலே மற்றொரு சிறப்பு என்னவென்றால் சிலம்பும் மேகலையும், தமிழ் இலக்கியப் பாதையிலே ஒரு திருப்பத்தை உண்டாக்கியுள்ளன. நான்கு மாடவீதிகளிலே தேர் திரும்புவது போல, இலக்கியப் பாதையிலே சில: திருப்பங்கள் உண்டாகி இருக்கின்றன. -

சங்க இலக்கியமாகிய பத்துப்பாட்டிற்குமுன் எடுத்துப் பார்த்தீர்களேயானால், நூறடிக்கு உள்ளாகவேதான் எல்லாப் பாடல்களும் இருக்கும். தனிப்பட்டவனைப் புகழ் .கின்ற பாடல்களோ, சிறப்பிக்கின்ற பாடல்களோ இருந் தாலும், அது பொது அறத்தைப் பற்றியதாக இருக்குமே ஒழிய அவனுடைய வீரமோ, வெற்றியோ என்று பாரட்டி உயர்த்திப் புகழும் மரபு இல்லை. புகழ்வது வ்ேண்டாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/197&oldid=684593" இலிருந்து மீள்விக்கப்பட்டது