பக்கம்:தாய்மை.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 தாப்மை

என்று ஒரு சங்கப்புலவர் பாடுகிறார். நீர் வழிப்படுஉம். புணைபோல் ஆருயிர் முறை வழிப்படுஉம் என்பது

1 திறவோர் காட்சியில் தெளிந்தன மாகலின், மாட்சியிற் பெரியோரை வியத்தலு மிலமே சிறியோரை விகழ்தத லதனினு மிலமே’

என்று பாடுகிறார். ஆனால் பத்துப்பாட்டிலே வரும்போது 103 அடிகளுக்குக் குறைந்த பாடலே கிடையாது. அது ஒரு திருப்பம். அடுத்த திருப்பம்தான் இந்தக் காவியத்திருப்பம். இப்பொழுது யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டு மானாலும், எ ைத வேண்டுமானாலும் பாடலாம். இருபதாம் நூற்றாண்டு இது.

குட்டுதற்கோ பிள்ளைப்பாண்டியன் இங்கு இல்லை குரும்பி அளவாய்க் காதைக் குடைந்து தோண்டி எட்டியமட்டும் அறுப்பதற்கோ வில்லி இல்லை இரண்டொன்றாய் மயிரை முடிந்து இறங்கப் போட்டு வெட்டுதற்கோ கவி ஒட்டக் கூத்தனில்லை - விளையாட்டாய்க் கவிதைதனை விரைந்து பாடித் தெட்டுதற்குத் தமிழறியாத் துரைகள் உண்டு தேசமெங்கும் புலவரெனத் திரியலாமே?

அப்படித் திரிகின்றவர்களுக்கு ஆதரவும் இருக்கிறதுஒரளவு. இந்த நிலை அந்தக்காலத்லே இல்லை. ஆகவே முறையாகச் செல்லுகின்ற ஆயிரம் அடிகளுக்கு உட்பட்ட பாதையை விட்டுத் திரும்பவேண்டும். திரும்பினால்தான் கோவலன் கதையையோ, மாதவி கதையையோ, கண்ணகி கதையையோ, மணிமேகலையின் கதையையோ சொல்ல. முடியும். உண்மையாகவே இளங்கோ, சாத்தனார் இருவரும். அஞ்சினார்கள் எப்படித் திரும்புவது என்று. அதற்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்தார்கள். இரண்டு பேரும் சேர்ந்து திரும்பலாம்; பழி வந்தாலும் இரண்டு பேரும் பார்த்துக் கொள்ளலாம் என்று. “.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/198&oldid=684594" இலிருந்து மீள்விக்கப்பட்டது