பக்கம்:தாய்மை.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிமேகலை - 197

காட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்’

என்று இருவரும் முடிவு செய்தார்கள். அதிலும் அரச குடும்பத்தில் பிறந்த தாம் முன்னே சென்றால் பிறர் குறை சொல்லத் தயங்குவார்கள் என எண்ணி அவர் முதலில் சிலப்பதிகாரத்தைப் பாடுகிறார்.

எனினும் கடைசியில் முடிக்கும் பொழுது, ‘மணிமேகலை மேல் உரைப்பொருள் முற்றிய சிலப்பதி காரம்’ என்று சிலம்பின் பதிகத்திலேகூறிச் சாத்தனாரையும், இணைக்கிறார். அவர்கள் இருவரையும் போற்றியதோடு தமிழ்நாடு அவர்கள் மரபிலே இன்றும் சென்றுகொண்டிருக் கிறது. பின்னர்ப் பெருங்கதை, சிந்தாமணி முதலிய இலக்கியங்கள்-காவியங்கள் வந்துகொண்டே இருக் கின்றன. அவர்கள் திருப்பிவிட்ட தேர் இன்னும் வேறு திருப்பத்திற்குச் செல்லாமல் தமிழ்நாட்டிலே உலவிக் கொண்டிருக்கின்றது என்று உங்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். ‘ . . .

  • இளங்கோ வேந்தன் அருளிக் கேட்ப

வளங்கெழு கூல வாணிகன் சாத்தன் மாவண் தமிழ்த்திறம் மணிமேகலை துறவு ஆறைம் பாட்டினுள் அறியவைத் தனனென் ‘ - என்று மணிமேகலைப் பதிகம் சொல்கிறது. ஆக இவர் . கேட்க அவர் பாடினார். அவர் கேட்க இவர் பாடினார்: வயதிலேயும் வித்தியாசம் இருக்கலாம். இல்லை என்று , சொல்லவில்லை. இளங்கோ இளைஞர்; அரசுக்கு இளைஞர். அவர், சோதிடன் ஒருவன் நீதான் பட்டத்திற்கு வருவாய்’ என்று இளமையில் கூறிய காரணத்தினால் , செங்குட்டுவன் முகம் மாறியதைக் கண்டு, அப்போதே துறவு மேற்கொண்டார். இவையெல்லாம் பதிகம் முதலிய வற்றால் தெரிகின்ற உண்மை. ஆகவே இளையவராகிய இளங்கோவடிகளும், மு தி ய வ ரா கி ய சித்தலைச்

13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/199&oldid=684595" இலிருந்து மீள்விக்கப்பட்டது