பக்கம்:தாய்மை.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 தாய்மை

சாத்தானாரும் கலந்து, இ ள ைம யி ன் துடிப்பும், ‘முதுமையின் அ னு பவ ங் க ளு ம் ஒன்றாகச் சேர்ந்து எழுந்தவையே இரட்டைக் காப்பியம் என்று இன்றும் நாம் போற்றுகின்றவை. இவை என்றென்றும் இரட்டைக் காப்பியமாகவே வாழும் என்று கூறி மேலே செல்கிறேன்.

- பெரியோர்களே! இது வாழ்க்கையைப் பற்றியது. அதிலேயும் பிக்குணியைப் பற்றியது. மணிமேகலை வாழ்ந்தாள். தனக்காக அல்ல. உலகத்திற்காக மலர் வனம் செல்கின்ற பொழுது அவளை வீதியிலே கண்டவர்கள் எல்லாம் என்னென்ன & &LIf & . விளக்கினார்கள் என்பதைச் சாத்தனார் சொல்லத் தவறவில்லை.

அவளுடைய முந்தைப் பிறப்பின் கணவனாக இருந்த இராகுலன் என்ற பெயரைப் பெற்ற அரச குமரன் அவளைத் தொடர்ந்து அங்குள்ள மலர்ச் சோலையில் புகுந்த பொழுது, கூட இருந்த தோழியாகிய சுதமதி அவளைப் பளிக்கறையில் அடைத்து வைத்தாள். இந்தப் பளிக்கறையைப் பற்றி மிக அழகாகச் சொல்கின்றார் ஆசிரியர். உருவை வெளியிடும்; ஒளியை வெளி விடாது” என்று. அது ஒரு கண்ணாடி மாளிகை. அதற்குப் பிறகு மணிமேகலா தெய்வத்தைப் பற்றிக் கூறுகின்ற போது, இளங்கோவடிகளும் சரி, சாத்தனாரும் சரி கோவலன் மதுரைக்கு வருவதற்கு முன்னமே மணிமேகலை பிறந்திருக்க வேண்டும் என்ற குறிப்புத்தான் தருகின்றனர். இளங்கோவடிகள் அதைக் காட்டாவிட்டாலும்கூட மாதவி எழுதுகின்ற கடிதத்தின் மூலமாகவும் சரி, பின்னால் வருகின்ற நிகழ்ச்சிகள் மூலமாகவும் சரி, அவள் பிறந்த போது-என்ன பெயர் வைக்கலாம் என்று கேட்ட போது ‘மணிமேகலா தெய்வம் என்று பெயரிடு’ எனத் தெய்வம் கூறியதாக இரண்டு இலக்கியங்களும் நமக்குச் சான்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/200&oldid=684597" இலிருந்து மீள்விக்கப்பட்டது