பக்கம்:தாய்மை.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிமேகலை 199

தருகின்றன. ஆகவே இவள் பிறப்புக்குக் காரணமாக, பெயருக்குக் காரணமாக இருந்த அதே தெய்வம் இவள் எந்தக் கா ர என த் தி ற் கா க ப் பிறந்தாளோ அந்தக் காரணத்துக்காக அவளை மணிபல்லவத்திற்குக் கொண்டு சேர்த்தது. -

அங்கு விழிப்புணர்ச்சி பெறுகிறாள். தீவதிலகை அங்கு வருகிறாள். பழம் பிறப்பை எல்லாம் உணர்த்துகிறாள். அந்தப் பளி க் க ைற யி ல் இருந்து அரசகுமரனைக் காணும் பொழுது, இவள் மனமும் இவளை அறியாது அவனை நாடுகிறது. பின்னால் அவன் விஞ்சையானால் கொலை செய்யப்பட்ட பிற கு காதலா!’ என்று கதறுகிறாள். தொடப் போகின்றாள். நல்ல வேளை கந்திற்பாவை செல்லல்! செல்லல்: சேயரி நெடுங்கண்! அல்லியந் தாரோன் தன்பால் செல்லல்!’ என்று தடுத்து விடுகிறது. ஆக முந்தைப் பிறவியின் பாசமும், பற்றும் இந்தப் பிறவியிலேயே வந்து அமைகின்றன என்பதை நாம் அறிய வேண்டும். அந்த அடிப்படையிலே வினை பற்றி வருகிறது; நான் பின்னால் கூறப் போகிறேன். சிலப்பதி காரமும் அப்படித்தான். மணிமேகலையும் அப்படித்தான். வினையை வற்புறுத்துவன. - . சிலப்பதிகாரத்தைப் பற்றிக் கூறும் போது,

  • அரசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற் றாவதும் உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும் ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்பது உம் சூழ்வினைச் சிலம்பு காரணமாகச் சிலப்பதிகாரம் என்னும் பெயரால் காட்டுதும் யாம்.ஓர் பாட்டுடைச் செய்யுள்’ என்று அங்கேயும் சயாம்’ என்று சேர்த்துக் கொள்கிறார். இந்த மூன்று அடிப்படைக்குத்தான் சிலப்பதிகாரம் எழுது .கிறேன் என்று கூறுகிறார். சாத்தனார் வினையைப் பற்றிப் பலவாறு வற்புறுத்துகிறார்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/201&oldid=684598" இலிருந்து மீள்விக்கப்பட்டது