பக்கம்:தாய்மை.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 . தாய்மை

“ வினையின் வந்தது வினைக்குவிளை வாயது;

புனைவன நீங்கிற் புலால் புறத் திடுவது மூப்புவிளி வுடையது; தீப்பிணி இருக்கை; பற்றின் பற்றிடம் குற்றக் கொள்கலம்; புற்றடங் கரவிற் செற்றச் சேக்கை’,

ஆக வினையின் வந் த து வி ை ைக்கு விளைவாய தான் இந்தப் பிறவி எடுத்தோம். இப்போது செய்கின்ற வினையினால் அடுத்த பிறவி வரப் போகின்றது. இதன்வழி இப் புலவர். மூன்று காலத்தையும் அறிய முடியும் என்று சொல்கிறார். எப்படி என்றால், இப்பொழுது நாம் அனுபவிக்கின்ற இன்பமோ, துன்பமோ முற்பிறவியில் செய்தது; ஆக முற்பிறவி பற்றி எனக்குத் தெரியும். அடுத்த பிறவி எப்படி என்றால் இப்போது செய்யும் நல்வினை, தீவினையைப் பொறுத்து அமையும். ஆக வினை இடை. விடாது பற்றிக் கொண்டு வருகின்ற ஒரு நிலையைத்தான் இந்தக் காப்பியங்கள் நமக்கு விளக்குகின்றன. .

பெரியோர்களே! பிக்குணியைப் பற்றித்தான் இங்கு. முக்கியமாகச் சொல்லவேண்டும். அங்கு மணிபல்லவத்திலே அமுதசுரபி கிடைத்தற்கு அழகான ஒரு காரணத்தைச் சொல்கிறார் தீவதிலகை. இது வெறும் மணிமேகலைக் கதை மட்டுமல்ல; கதைக்குள்ளே பல கதைகள் வருகின்றன. சிறுகதைகளும் உண்டு; பெருங் கதைகளும் உண்டு. ஒவ்வொரு கதையும் ஒவ்வோர் அறத்தை விளக்கும். ஆசிரியர் ஆபுத்திரன் கையில் இருந்த அமுதசுரபி எப்படி வந்தது என்பது பற்றித் தனியாகவே ஒரு கதை சொல்கிறார். பசுவின் வயிற்றிலே பிறந்ததாலே ஆபுத். திரன் என்று பெயரிட்டனர்; அந்தணர் யாகம் செய்யும் போது-பசுவைக் கொலைக்கு அழைத்துச் செல்லும் போது அதைத் தடுத்தான் ஆபுத்திரன். அப்போது அவர்கள் பலவகையிலே அவனைக் கண்டிக்கிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/202&oldid=684599" இலிருந்து மீள்விக்கப்பட்டது