பக்கம்:தாய்மை.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிமேகலை 205

பொருட்டுப் பிரிந்து சென்ற காதலன், மதுரையில் பெரும் பொருள் ஈட்டினான். அப்போது அங்கே வந்த ஒரு பெரியவர், என்னதான் இருப்பினும் இல்லறத்திலே இருந்து வாழவில்லை எ ன் றால், நீ தேவர் உலகத்திலே, பேரின்பத்திலே வாழ்வதற்குரிய பேற்றினை அடைய முடியாது என்கிறார். பெரிய புராணத்தில் பார்த்தீர்களேயானால் பல நாயன்மார்கள் இல்றத்திலே இருந்துதான் வீடு அடைகிறார்கள். ஆனால் துறவறத்தைப் பழிக்கவில்லை. திருவள்ளுவர் கூட,

‘அறன் எனப்பட்டதே இல் வாழ்க்கை ‘ என்று ஏகாரத்தோடு கூறுகிறார்.

ஆதிரையின் கணவன் சாதுவன் வாழ்க்கையில் தவறிழைத்தான்; அவன் தவற்றினைச் சுட்டிக்காட்டின்ாள். அதனால் அவன் வங்கத்தில் வெளி நாட்டிற்குச் சென்று திவு ஒன்றில் விடப் பெறுகிறான். அங்குள்ள காட்டு

மிராண்டிகளின் தலைவன், - .

எண்கு தன் பிணவோடு இருந்தது என்ன . தன் துணையோடு இருந்ததாகச் சாத்தனார் குறிப்பிடு கிறார். .

அத் தலைவன்,

“ கம்பிக்கு இளையள் ஓர் நங்கையைக் கொடுத்து

வெங்களும் ஊனும் வேண்டுவ கொடும் ‘ என்று கூற, சாதுவனோ வெவ்வுரை கேட்டேன் வேண்டேன்’ என்று மறுக்கிறான்.

அடுத்து உயிரா? உடலா! இவற்றில் எது சிறந்தது எனில், உயிரும் உனதில்லை; உடலும் உனதில்லை. நீயே உடலாக இருந்தால் உடலை என்னுடல்” என்று ஏன் கூறுகிறாய்? நீயே உயிராக இருந்தால் என்னுயிர்"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/207&oldid=684604" இலிருந்து மீள்விக்கப்பட்டது