பக்கம்:தாய்மை.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.204 தாம்ம்ை

மணிமேகலை அமுதசுரபி பெற்றுக் கொண்டு வருகிறாள். அதிலே சோறு இல்லை. எப்படிக் கொடுப்பது என்ற கேள்வி? அதற்கும் வழி சொல்கிறார். ஆதிரை என்பாள் இருக்கின்றாள். அவளிடத்திலே போய் முதலில் சோறு வாங்கினால் எடுக்க எடுக்கக் குறையாது என்று சொல்கிறார். சாத்தனார் கூறும் கற்பு விசித்திர மான கற்பு. கற்பு என்றால் நாம் மற்றவர்களை நினைக்காமல் இருப்பதுதான் என்று நாம் நினைக் கிறோம். சாத்தனார் கூறுவது,

கற்புடைப் பெண்டிர் பிறர் நெஞ்சு புகார் ‘

என்பது. மற்றவர் பார்த்துத் தன்னை நினைக்காசி வகையில் ஒரு பெண் நடந்து கொள்ள வேண்டும். இதனைக் கதையில் கூறும் போது, மருதி என்பாள் கோவிலுக்குச் சென்று வருகையில் ஒர் அரச மகன் அவளைக் கண்டு விரும்ப, அதைஉணர்ந்த அவள் திரும்பவும் கோவிலுக்குள் சென்று, தலையை மோதிக் கொண்டு அழுகிறாள். நான் ஒரு பாவமும் செய்யவில்லையே: கணவனுடன் கற்புடையவளாகத்தான் இருக்கிறேன். எப்படி என்னை மற்றவர் விரும்பலாம், என்று தெய்வத் திடம் கேட்கிறாள். அவளிடம் கந்திற்பாவை திருக்குறள் படித்திருக்கின்றாயா?” என்று வினவிற்று.

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவான் பெய்யெனப் பெய்யும் பெருமழை என்றஅப் பொய்யில் புலவன் பொருளுரை தேராய் ‘ என்று பொய்யில் புலவன்’ எனத் திருவள்ளுவரைச் சாத்தனார் குறிப்பிடுகிறார். * . -

மணிமேகலை துறவு நூல் மட்டுமில்லை. இல்லறத் தினைப் போற்ற ஆதிரையின் கதையையும் அடுத்து கூறப் போகிறார். புகாரில் விசாகையை விரும்பிப் பின்னர் அவளைத் திருமணம் செய்து கொள்ளாமல் வாணிபம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/206&oldid=684603" இலிருந்து மீள்விக்கப்பட்டது