பக்கம்:தாய்மை.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிமேகலை 20s

அதற்குப் பிறகு இவனிடம் சோறு கேட்க ஆளில்லை. அப்படி அவன் தன் வஞ்சத்தைத் தீர்த்துக் கொண்டான். அப்பொழுதுதான் சாவக நாட்டுக்குப் போகும் அந்தக் கப்பலிலே ஏறி மணிபல்லவத்திலே இறங்கும்போது, இவனை விட்டுவிட்டு அந்தக் கப்பல் சென்றுவிடுகிறது. அங்கு உணவு அருந்துவார் யாருமில்லாத காரணத்தினால் அந்தப் .ெ பா ய் ைக யி ல் அ. மு. த சு ர பி ைய விட்டு, அங்கேயே உயிரையும் விட்டான் என்று தீவதிலகை இந்த வரலாற்றையெல்லாம் கூறுகிறாள். ஆக, இந்த ஆபுத்திரன் வரலாற்றின் வாயிலாகச் சில உண்மைகளை விளக்குகிறார். வேதவேள்வி தவறு என்பது; சாதி வித்தியாசம் கூடாது என்பது; இந்த நேரத்தில் ஆபுத்திரனை ஆமகன் என்று

சொன்ன போது பதில் பேசுகிறான்.

f

‘ ஆன்மகன் அசலன், மான்மகன் சிருங்கி, புலிமகன் விரிஞ்சி, புரையோர் போற்றும் கரிமகன் அல்லனோ கேச கம்பளன் ஓங்குயர் பெருஞ்சிறப்பு உரைத்தலும் உண்டால் ஈங்கிவர் நுங்குலத்து இருடிகணங்க ளென்று ‘

அழகாகச் சாத்தனார் கூறுகிறார். ஆகவே, உலகத்திலே பிறந்தவர்களுக்கு எல்லாம் வேறுபாடு கிடையாது. அடுத்து,

இன்னார் இனியார் என்னாது

உற்றார் அற்றார் என்னாது

கல்லார் அல்லார் என்னாது

எல்லோர்க்கும் கொடுமதி: என்று சங்கப் புலவர் கூறிய படி ஒரு வேறுபாடும் இல்லாது எல்லோர்க்கும் உதவுவதுதான் இந்தப் பிக்குணிக் கோலத்தின் தன்மை-துறவியின் தூய தன்மை என்கிறார். ஆபுத்திரன் வாயிலாகப் பின்னால் வரப் போகின்ற மணிமேகலையின் சிறப்புகளையெல்லாம் இங்கே முன்னே சொல்லிவிட்டு மேலே போகிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/205&oldid=684602" இலிருந்து மீள்விக்கப்பட்டது