பக்கம்:தாய்மை.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 தாய்மை

“ துறக்கமே முதலவாய தூயன யாவையேனும்

மறக்குமா கினைய லம்மா ‘

என்று குறிப்பிடுகிறார். துறக்கம் ஒரு போக பூமி: இதைப் பற்றிச் சிவப்பிரகாசர், -

போகபூமியினில் போக தனுவிதால் பொருந்தகாலாது. ஏகமாம் இன்ப சித்தி, இயம்புறில் கருமபூமி - ஆகமானது கொண்டன்றி ஆதலால் ஞாலத் - -

தெய்தி யோகமாம் நெறியில் கின்றோர் உண்மையே -

சாதித்துக் கொள்வர் ‘’

என்று பாடுகிறார். ஒருவன் புண்ணியம் மிகுதியாகச் செய்தால், முன்னே இந்திர பதவியில் இருக்கும் ஒருவனை அது கீழே தள்ளிவிட, இவன் அந்த இந்திரப் பதவியை அடைவான். இதனைச் சாத்தனார் அழகாகக் குறிப்பிடு கிறார். ஆபுத்திரன் மக்களுக்கு அளவுக்கு மீறிச் சோறு போடுகிறான். இவன் செய்யும் இத்தப் புண்ணியத்தினால், இவனுக்கு இந்திர பதவி கிடைக்குமோ என்று இந்திரனுக்குப் பயம் வந்து விடுகிறது. அதனால் உடனே ஒடி வருகிறான். :தீ தேவலோகத்துக்கு வா! உனக்கு அரிய இன்ப வாழ்வினைத் தருகிறேன்” என்றெல்லாம் கூறு கி றா ன், அ வ ைன த் தம்பி இங்கே a என்றழைத்து, ஆபுத்திரன் உங்கள். நாட்டில் பசித்தவர்கள் இருக்கின்றனரா?’ என்று கேட்க, ‘இல்லை’ என்று கூறுகிறான். ‘வருந்தி வந்தோர் அரும்பசி களைந்து, அவர் திருந்து முகம் காட்டும் என் தெய்வக் கடிளுை; உண்டி கொல்லோ, உடுப்பன கொல்லோ, பெண்டிர் கொல்லோ, பேணுநர் கொல்லோ, யாவை சங்களிப்பன தேவர்கோன்’ என்று கூற, இந்திரன் வேறு. வழியில்லாது திரும்பிச் சென்று மழையைப் பெய்வித்து, வளம் உண்டாக்குகிறான். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/204&oldid=684601" இலிருந்து மீள்விக்கப்பட்டது