பக்கம்:தாய்மை.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிமேகலை . 20

ஆற்றுப் படுத்துகின்ற ஒரு பெருஞ் சிறப்பு ஆதிரையாகிய ஒரு கற்புடைப் பெண்ணுக்குத்தான் உண்டு என்கிறார். மணிமேகலை அவள் முன் வந்து நிற்கும் சிறப்பைப். புனையா ஒவியம் போன்று நின்றனள் என்று குறிப்பிடு. கிறார். ஆதிரை உணவிட்ட போது,

“ பாரக மடங்கலும் பசிப்பிணி அறுகென ஆதிரையிட்டனள் ஆருயிர் மருந்து ‘ என்று கூறுகிறார். -

குடிப்பிறப்பழிக்கும். விழுப்பங்கொல்லும்

பிடித்த கல்விப் பெரும்புனை விடுஉம்,

காணணி களையும், மாணெழில் சிதைக்கும்,

பசிப்பிணி என்னும் ஓர் பாவி’ என்று பசிப்பிணியை ஒரு பாவி எனக் கூறுகின்றார். அழுக்காறென ஒரு பாவி’ என்று வள்ளுவர் குறிப்பிடு: கிறார். பசி வந்திடப் பத்தும் பறந்து போகும் என்று. ஒளவையார் குறிப்பிடுகிறார்.

பாரகமடங்கலும் பசிப்பிணி அறுக’ என்றை ஆதிரையின் கூற்று, இன்னும் உண்மையாகவில்லை. என்றைக்கு உலக முழுதும் பசிப்பிணி அறுகிறதோ அன்று தான் மணிமேகலை வாழ்வாள், அதுவரை நாம் அவளை நாள்தோறும் சிதைத்து, கொன்று கொண்டு வருகிறோம். என்பது தான் பொருள். உலகமெல்லாம் பசியற்று இருக்க வேண்டும் என்பதுதான் மணிமேகலையினுடைய பிக்குணிக்க கோலத்தின் அடிப்படை உண்மை. இந்த உண்மையைத், தான் இங்கே முக்கியமாகக் குறிக்க நினைக்கிறேன்.

அதனால்தான் சாத்தனர்,

  • பகையும் பிணியும் பசியும் நீங்கி

வசியும் வளனும் சுரக்க என்று வாழ்த்துகிறார். பசி, பிணி, பகை ஆகிய இவை. மூன்றும் எந்த நாட்டில் இல்லையோ அந்த நாடு சிறக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/209&oldid=684606" இலிருந்து மீள்விக்கப்பட்டது