பக்கம்:தாய்மை.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 . தாய்மை

ஆபுத்திரன் புண் ணியராசனாக சாதுவ நாட்டிலே பிறந்திருக்கிற போது அவ ன் நல்லாட்சி புரிவதால், நாட்டில் மழை பெய்ய நாடு வளமுடன் திகழ்கிறது. சங்க காலப் புலவர் ஒருவர் இயற்கையல்லன, செயற்கையில் தோன்றினும், காவலர் பழிக்கும் இக்கண்ணகன் ஞாலம்’ என்று கூறுகிறார். உலகத்திலே மழை பெய்யா விட்டாலும், கடல் வற்றினாலும், இயற்கையில் செயற்கை -உண்டானாலும், காவலனை உலகம் பழிக்கும். சாதுவ நாட்டிலே ஆபுத்திரன் புண்ணியராசனாக இருந்து நல்லாட்சி புரியும் போது மணிமேகலை அங்குச் செல் செல்கின்றாள். இப் புண்ணியராசன் ஆட்சியில் எங்களுக்கு ஒரு குறையும் இல்லை என்கிறார்கள். கம்பர் அரசைப் பற்றிச் சொல்லும் போது நாட்டிலே நல்லரசு இருந்தால் நாடு நலிவுறாது; போட்டியிராது; பொறாமையிராது; பகையிராது; பண்பு கெட்டிராது. எல்லோரும் எல்லாம் எய்தி வழ்வார்கள் என்கிறார். அயோத்தியில் வாழ்ந்தார் களோ இல்லையோ, கம்பன் தமிழ் நாட்டுப் பண்பாட்டிலே கனவு கண்டான். அந்தக் கனவைச் சாத்தானாரும் காண் கின்றார். அந்தப் புண்ணியராசன் வாழ்ந்த நாட்டைப் போல் இன்று உலகெலாம் இருக்கின்ற நாடுகள் வாழ வேண்டும். அந்த அளவு இல்லாவிட்டாலும், அவர்கள் சொன்னபடி, நான் உலகைச் சுற்றிப் பார்த்த போது, ஒரளவு ஒரு சிவ நாடுகளாவது அந்த வழியில் சென்று கொண்டுதான் இருக்கின்றன என்று அறிந்தேன்.

பொருளாதாரத் துறையிலே மட்டுமல்லாது, நாம் உளத்தளவிலும் முன்னேற வேண்டும். அந்த உண்மையைத் தான் அரசன் மேலேற்றிக் கூறுகிறார் சாத்தனார். மன்னவன் நல்லவனாக இருந்தால் நாம் நன்றாக

வாழலாம்.

மணிமேகலையை உதயகுமரன் பற்றப் போனான். காஞ்சனன் அவனை வாளால் வெட்டினான்; அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/210&oldid=684760" இலிருந்து மீள்விக்கப்பட்டது