பக்கம்:தாய்மை.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிமேகலை 20s.

இறந்தான் என்று சொல் கி ற போது, அவன் தந்தையாகிய மன்னன், நான் பெரிய தவறு செய்து விட்டேன். நான் கொடுக்க வேண்டிய தண்டனையை, அந்தக் காஞ்சனன் கொடுத்தானே; எங்கள் முன்னோர். எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்? நீதியைக் காக்கத் தன் மகனைத் தேர்க்காலில் இட்டுக் கொலை செய்தானே ஒருவன். நான் அந்தப் புண்ணியத்தைச் செய்ய வில்லையே, என்று கூறுகிறான் மன்னன். சேக்கிழார்,

“ மாநிலங் காவல னாவான் மன்னுயிர் காக்குங் காலை

தான்.அதனுக்கு இடையூறு தன்னால் தன்பரிச னத்தால் ஊனமிகு படைத்திறத்தால், கள்வரால், உயிர்கள் . . . - - தம்மால்.

ஆணபயம் ஐந்தும் தீர்த்து அறங்காப்பானல்லனோ ’’ என்று பாடுகிறார். . -

மனிதனிடத்து வ ரு கின்ற குற்றங்களெல்லாம். உடலாலே. வாக்காலே, நினைப்பாலே ஏற்படுவன. வாக். கால் நான்கு குற்றங்களும், உடலால் மூன்று குற்றங்களும், தினைவால் மூன்று குற்றங்களும் எனக் கூறுகிறார்: சாத்தனார். f -

கொலையே, களவே, காமத் தீவிழைவு உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும் பொய்யே. குறளை, கடுஞ்சொல், பயனில் சொல்லெனச் சொல்லில் தோன்றுவ நான்கும். வெஃகல், வெகுளல், பொல்லாக் காட்சி என்று உள்ளக் தன்னின் உதிப்பன மூன்றும் ‘ ஆகிய இந்தப் பத்துக் குற்றங்களும் இல்லையெனில் நீ. மனிதன்தான் என்கிறார்.

பிக்குணியாக என்றென்றும் வாழ்கின்ற உலகத்திற்கு அறிவுறுத்திச் சென்ற உண்மையான நிலை இது. இதை: யார் யார் விடுகிறார்களோ அவர்களெல்லாம் உண்மை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/211&oldid=684761" இலிருந்து மீள்விக்கப்பட்டது