பக்கம்:தாய்மை.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 தாய்மை

A

மதுரையிலே ஆயர்குலத்தைப் பற்றிப் பாடும்போது ஆய்ச்சியர் குரவையிலே, -

/ g .

• நாராயணா என்னா நாவென்ன நாவே

கண்ணிமைத்துக்

காண்பார் தம் கண் என்ன கண்ணே

என்று பாடுகிறார். அதே போல வஞ்சியிலே குன்றக் குரவையில் முருகனைப் பற்றிப் பாடுகிறார். அவருக்குக் காழ்ப்பு இல்லை. - - -

சாத்தனார் சமயக்கணக்கர் தந்திரங் கேட்ட ஒரு காதையைக் கடைசியிலே அமைத்து, எல்லாச் சமயங்களை யும் வரிசை வரிசையாகச் சொல்லக் கேட்டு, இது தவறு, இது தவறு” என ஒதுக்கி விட்டுக் கடைசியில் தம் சமயம் தான் உயர்ந்தது என்று நிலை நாட்டுகிறார். அவ்வாறு நிலை நாட்டியதால்தான் பெளத்தம் அழிந்தது. மணி. மேகலையில் சமயக்கணக்கர் தந்திரம் கேட்ட காதை இல்லை என்றால் அது சிலப்பதிகாரத்தை விடக் காலத்தால் விஞ்சி வாழும் என்று நான் கூறுவேன். அன்று அவர் இட்ட வித்து, இன்று பலவகையிலே தமிழ்நாட்டை மட்டுமல்லாது இந்திய நாட்டையே அலைக்கழித்துக் கொண்டு இருக்கிறது. இது ஒன்றைத்தான் நான் அவரிடம் குறை என்று சொல்ல. வேண்டும்.

மணிமேகலைபற்றிச் சி ற ப் பா. க ப் பாடுன்ார். அவளுடைய பிக்குணி உருவம் எப்படி எந்த வகையிலே அமைகிறது என்கிறார். ஆபுத்திரனைக் காட்டுகிறார். ஆதிரையைக்காட்டுகிறார். மன்னவர்களைக் காட்டுகிறார். பத்துக் குற்றங்களைக் காட்டுகிறார். இவற்றை நீக்கினால் தான் நீ மனிதனாக வாழ முடியும் என்று சொல்கிறார். இத்தனையெல்லாம் சொல்லிய சாத்தனார் கடைசிக்குமுன் அதிகாரத்தில் சமயக்கணக்கர் தந்தரம் கேட்ட காதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/214&oldid=684764" இலிருந்து மீள்விக்கப்பட்டது