பக்கம்:தாய்மை.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனோன்மணியத்தில் பாத்திரப்படைப்பு 215

சமுதாயத்தின் கூறுபாடாக அமைந்த மனிதனே நாடகத்தில் பேசுகிறான். நடிக்கிறான் - பாடுகிறான் . பாவனை செய்கிறான். எனவே நாடகத்தில் பங்கு ஏற்கும் பாத்திரங்களின் அடிப்படையிலேயே-அவற்றின் பேச்சு, செயல் இவற்றின் முறையிலேயே வாழ்க்கைப் பாடங்கள் அமைகின்றன. எனவே நாடகத்தில் பாத்திரப் படைப்பே முக்கியமான இடத்தைப் பெறுகின்றது. பிறவெல்லாம் அங்கமாக, பாத்திரங்களே உயிரொடு உணர்வொடு கலந்து முழு உருவாக அமைந்து நாடகத்தை நடத்து கின்றன.

நாடகத்தின் கூறுபாடுகளை அறிந்த மேலை நாட்டு அறிஞர்கள் பாத்திரப் படைப்பே இன்றியமையாதது எனக் குறிப்பிடுவர். கதையாயினும் நாடகமாயினும் பாத்திரங் களின் வகையும் வனப்பும் சொல்லாடலும் செயல்முறை களும் அக்கதையாகவும் நாடகமாகவும் அமைகின்றமையின் அவற்றின் படைப்பாளர்களாகிய ஆசிரியர்கள் ஒர்ந்து உணர்ந்து அவற்றைப்படைக்கவேண்டும் என்பர். அவ்வாறு படைக்கப்பட்ட பாத்திரங்களைப் படைப்போன் செலுத்து வதா அன்றிப் பாத்திரங்கள் படைப்ப்ோனைச் செலுத்து வதா என்று எழும் ஐயத்துக்குச் சிலர் தம்மைப் பாத்திரங் கள் செலுத்துகின்றன என்பர். அதன் கருந்தென்ன? நாடகத்தைப் படைக்கும் நல்லாசிரியன் பாத்திரங்களைப் படைத்து அவற்றின் வழித் தன் கருத்தைப் புகுத்தினாலும், பெரும்பாலும் அப்பாத்திரமாகி - அந்தப் பாத்திரத்தின் உணர்வினைத்தான் பெற்று, தன்னை மறந்து, அப்பாத்திர மாகத் தான் பேசுவதையே இது காட்டுகிறது. தமிழில் சிலப்பதிகாரம் தொடங்கி மனோன்மணியம் வரையிலும் ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர் நாடகங்களிலும் இந்நிலை நன்கு உணரப்படும்.

நாடகப் பாத்திரங்களின் தன்மையை அறிய இருவகை மரபுகள் உள்ளன. ஒன்று அப்பாத்திரங்கள் பேசுவன;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/217&oldid=684767" இலிருந்து மீள்விக்கப்பட்டது