பக்கம்:தாய்மை.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 தாய்மை

மற்றொன்று அப்பாத்திரங்களைப் பற்றிப் பிற பாத்திரங்: கள் பேசுவன. ஆசிரியர் சில பாத்திரங்களை நன்மை தீமை இவற்றின் செயல் அடிப்படையில் படைத்து, அவற்றைப் பிற சிறு பாத்திரங்களுடன் இணைத்து, உயர்த்தியும். தாழ்த்தியும் காட்டி, அவரவர் எங்கெங்கே சென்றாலும் அந்தந்தச் சூழ்நிலையில் பேச வைத்து அவற்றின் முழுத் தன்மையினையும் உணர வைப்பர். உலக சமுதாய வாழ்வியலை நன்கு உணர்ந்து கொள்ள அப்பாத்திரங். களின் பேச்சுக்களே பயன் படுகின்றன. எனவே பாத்திரப் படைப்பு நாடகத்தில் முக்கிய இடம் வகிக்கின்றது. ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர், பெர்னாட்ஷா போன்றவர் களும் வடமொழியில் காளிதாசன் போன்றவர்களும் இந்த அடிப்படை உண்மையினை உணர்ந்து, தத்தம் பாத்திரங் களைப் படைத்து அவற்றின் வழியே வாழ்வினைக் காட்டு வதனாலே காலங்கடந்து வாழ்கின்றனர், - -

சில ஆசிரியர்கள் தத்தம் வாழ்வியலொடு பொருந்தாத கொள்கைகளை நாடகங்களில் புகுத்தி அவற்றை விளக்கும் வாயில்களாகப் பாத்திரங்களை ஆக்கிக்கொள்வர், அவர்கள் தம் முயற்சியில் வெற்றிபெறவில்லை என்பதைக் காலம் காட்டுகின்றது. அப்படியே, சமுதாயப் பொது நியதி யல்லாத தனிப்பட்ட வருடைய வாழ்க்கையினைப் பின்னிப் பிணைக்கும் நாடகங்களும் காலத்தை வென்று வாழ்வ தில்லை. சமுதாய அடிப்படையிலோ அன்றிக் கற்பனை யிலோ - படைத்து அந்தச் சமுதாயச் சூழலுக்கு ஏற்ற கருவமைந்த நாடகங்களே என்றும் வாழ்வனவாம்.

கதையோ நிகழ்ச்சிகளோ பிறகுழல்களோ பாத்திரங் களோடு ஒன்றாவகையில் படைக்கப் பெறுமாயின், அப்பாத்திரங்களின் முக்கியத்துவமும் இன்றியமையா மையும் கெடுவதோடு நாடகமே சிறக்க வழியற்றுக் கெடும். சில பெரும் பாத்திரங்களும் அங்கங்கே தலை: காட்டிச் செல்லும் சிறுபாத்திரங்களும் உள்ளுணர்வோடே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/218&oldid=684768" இலிருந்து மீள்விக்கப்பட்டது