பக்கம்:தாய்மை.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனோன்மணியத்தில் பாத்திரப்படைப்பு 2 I 7

படைக்கப் பெறுமாயின், அந்த நாடகம் நாட்டில் உணர் ஆட்டிச் சமுதாயத்தை வாழவைக்கும் ஊன்று கோலாக அமையும். இந்த உண்மையினை உளத்தில் வைத்தே நல்ல நாடக ஆசிரியர்கள் தத்தம் படைப்புக்களைத் திறம் பட உண்டாக்குவர். நாடகத்துக்துக்கு கதை எப்படி முக்கியமோ அப்படியே பாத்திரங்களுமாம். சிலவிடங் களில் பாத்திரங்களின் அமைப்பினாலே கதை சிறந்து விளங்குவதோடு, சில நுணுக்கமான உண்மைகளும் -உலகுக்குப் புலனாகும். தனிமொழியும் நீண்ட பேச்சுக் களும் அத்துணைச் சிறப்புடையனவாக (ஒரு சில இடங்கள் தவிர்த்து) போற்றப் பெறா.

சிலர் பாத்திரங்களைத் தேவைக்கு அதிகமாகப் படைத்து இடர்ப்படுவர். பாத்திரப்படைப்பு இன்றியமை யாத ஒன்று என்பதனால் எண்ணற்ற பாத்திரங்களை அளவுக்கு மீறிப் பேசவைத்து ஏன் நாடகத்துக்கு வந்தோம் எனக் காண்போர் எண்ணுமாறு எல்லையற்று விரிவதும் வேண்டுவதன்று. மற்றும் வெறும் பேச்சு மட்டுமன்றிச் செயலும் பாத்திரங்களுக்கு இன்னியமையா தன. பார்வையாளருக்குப் புரியும் வகையில் அமையும் குறிப்புக்களும் செயல்களும் பாத்திரங்களுக்கு அடிப்படைத் தேவைகளாகும். மொத்தத்தில் நாடககப் பாத்திரங்களின் பேச்சு, நடை, உடை, செயல், குறிப்பு பிற நிகழ்ச்சிகள் இவையே நாடகத்தை உருவாக்குவன. இந்த உண்மை யினை உணர்ந்து எழுதப் பெற்ற நாடகங்கள் (அவை நடிக்கப் பயன் பெறா நிலையிலும்) - சிலம்பு - மனோன் மணியம் போன்றவை என்றென்றும் வாழும் என்பது உறுதி. இத்தகைய நல்ல நாடக வரிசையில் நிற்கும் மனோன்மணிய நாடகத்தின் அமைப்பினைப்பற்றி இனி எண்ணிக்

காண்போம்.

மனோன்மணிய'த்தின் ஆ இ ரி ய ர் சுந்தரம்பிள்ளை அவர்கள் தத்துவம்பயின்றவர்; தத்துவப் பேராசிரியராக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/219&oldid=684769" இலிருந்து மீள்விக்கப்பட்டது