பக்கம்:தாய்மை.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனோன்மணியத்தில் பாத்திரப்படைப்பு 219

“ சுந்தர முனிவன் சிந்துர அடியும்

வாரிசம் போல மலர்ந்த வதனமும் கருணை அலையெறிந் தொழுகும் கண்ணும் பரிவுடன் முகிழ்க்கும் முறுவலும் பால்போல் கரைதரு தலையும் புரையறு உரையும் சாக்தமும் தயையும் தங்கிய உடலும் ‘’ (1 - 2 . வரி 89-95) எ ன்பன அவரடிகள். ஆசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்கள் தமக்கு இளமையில் நல்லாசிரிய ராக இருந்து அருள் நலம் காட்டி ஆற்றுப்படுத்திய கோடக நல்லூர் சுந்தரசுவாமிகளை எண்ணியே இப்பாத்திரத்தை அமைத்தார் எனக் கொள்ளலாம். அதனாலேயே முதலில் குருவணக்கம் கூறும் முகத்தான் சுந்தரமுனிவர் வந்தனம் வந்தனம்’ என்ற தொடர்காட்டிப் பின் கதைக்குள் புகுகிறார். சுந்தரமுனிவர் பாத்திரம் சீவகனுக்கும் மனோன்மணிக்கு மட்டுமன்றி மனித சமுதாயத்துக்கே வாழ்வுக்கு ஏற்ற - தீமை நீங்கி நன்மை காணும்-நல்ல நெறியைக் காட்டுகின்றது. மனோன்மணிக்கு ஏற்ற கணவனாகப் புருடோத்தமனைக் குறித்த அச்சுந்தரர் அவர்தம் மனத்தில் தம்மை மறந்த நிலையில், நாடகாசிரி யர் சுந்தரம் பிள்ளை அவர்கள் நாடகத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கிறார். இடையில் நடப்பவை யாவும் வாழ்வின் பல்வேறு மாறாட்டங்களே என்பதும் நல்லவர் எண்ணிய நல்லெண்ணமே இறுதியில் வெற்றியுறும் என்பதும் இதனால் விளங்குவதாகும். .

சுந்தரமுனிவர்தம் சீடர்களாக வ ரு ம் நிட்டாபரர் கருணாகரர் ஆகிய இருவரும் மிகச்சிறிய பாத்திரங்களாகி எங்கோ ஓரிரு இடத்தில் வருகிறவர்களாயினும் ஆசிரியர் அவர்களால் உயர்ந்த தத்துவத்தினை உணர வைக்கிறார். அவர்களுக்கெனவே தனியாக ஒரு களம் (அங் 4 களம்1) அமைத்து உயர்ந்த தத்துவத்தினைப் பேசவைக்கின்றார். உலகவாழ்வில் ப ட் டு ழ லு ம் உயர்நிலையினையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/221&oldid=684771" இலிருந்து மீள்விக்கப்பட்டது