பக்கம்:தாய்மை.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320 தாய்மை

உணர்ந்தால் ஒன்றுமற்ற உயிர் நிலையையும் அவர்கள் வாயிலாக உணர்த்தியதோடு அல்லாமல், இறுதியில் சுந்தர முனிவர் வாக்கில் உங்கள் பேச்சறிவோம்; ஒயாப்பேச்சு: இங்கது முடியுமோ? ஏன் உங்கட்கும் சமயிகட்காம் சச்சரவு’ எனக்காட்டி அந்த ஒயாப் பேச்சின் தன்மையினையும் அதைக் கொண்டு உலக சமயிகள் இடும் சச்சரவினையும் சுட்டி, வீண் ஆரவாரப் பேச்சற்ற உண்மை நிலையே மெய்ச் சமயம் என விளக்கி விட்டார். இந்த இரு பாத்திரங்களை அப்படியே விட்ட ஆசிரியர், அவர்தம் வாதத்தின் முடிவில் எட்டாப் பெருநிலையில் உள்ள உயிர் இறையொடும் கலந்துற வாடும் நிலையில் - மனோன் மணியும் புருடோத்தமனும் இணைந்த நி ைல யி ல் :கண்டேன்! கண்டேன் கருணாகரரே “ எனப் பேச வைத்துச் சமயங்களின் உச்ச நிலையினைத் தொட்டுக் காட்டும் திறன் சிறந்ததாகும். இவ்வாறு சிறுபாத்திரங்கள் வழி பெரிய உண்மைகளை விளக்கும் திறன் அனைவருக்கும் அமையும் ஒ ன் ற ன் று. சிறுபாத்திரங்கள் வேடிக்கை விளைக்கும் வகையில் கழியுமே ஒழிய விளையும் உயர் வாழ்வைச் சுட்டுவது அருமை. ஆசிரியர் சுந்தரனார் அங்கும் தம் கருத்தை-தத்துவத்தைத் தூவி வள ர

விட்டுள்ளார்.

இவ்வாறே தம் பாத்திரமாகிய வாணியின் கதையின் இரு பாத்திரங்களின் பேச்சிலும் வாழ்வின் தத்துவத்தையும் இரண்டறக் கலக்கும் பேரின்ப வாழ்வையும் தெள்ளத் .ெ த ளி ய க் காட்டிவிட்டார். சிவகாமியின் ச ரி த த் தோற்றமே மனோன்மணியின் மனப் போராட்டத்துக்கு உரிய நல்லமுடிவைத் தந்துவிடுகின்றது. ஆசிரியர் தான் விரும்பிய கணவனை இறுதியில் பெறுவாள்’ என்ற உண்மையினை இச்சரிதத்தின் வாயிலாகவே நமக்கு முன்னறிவிப்பாகச் செய்துள்ளார். மே லு ம் து ற வு வேண்டிய மனோ ன் ம ணி யி ன் கனவில் கண் ட புருடோத்தமன் தன்மையினைச் சுட்டும் போது, உயிர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/222&oldid=684772" இலிருந்து மீள்விக்கப்பட்டது