பக்கம்:தாய்மை.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனோன்மணியத்தில் பாத்திரப்படைப்பு 221

ஒன்றான இறைவனைச் சுட்டும் சொற்களாலேயே காட்டி அந்த வகையிலேயே சிவகாமியின் கதையினையும் முடித்துத் தத்துவ நெறியினை எளிமையாக உண ர வைக்கிறார். -

‘கண்ணால் எங்ஙனம் காணுவர்? கண்ணுளார்’

எண்ணவும் படார்! எண்ணுளம் உளார்’

இதுவெனவொண்ணா உவமையி லொருவரை

எத்திறம் என்றுயான் இயம்ப”

(111-3) என்பன போன்றவை நாடக நிலையில் மட்டு மன்றித் தத்துவ நிலையிலும் நம்மைச் செலுத்துகின்றன அல்லவா! .

வாணியாகிய பாத்திரத்தின் படைப்பாகிய சிவகாமி, சிதம்பரம் இருவரும் வெறும் கதைக்குரிய பாத்திரங்களாக அமையவில்லை. எனினும் மனோன்மணி உள்ளத்துத் தோன்றிய ஒருவனை இறுதியில் மணப்பாள் என்ற உண்மையினையே அவை உணர்த்துகின்றன. அத்துடன் உயிர் இறையருள் பெறும் தன்மையினையும் யாரை யார் பற்றினார் என அறிய வொண்ணாப் பெருநிலையையும்

விளக்குகின்றன.

எவர்தாமுன் அணைந்தாரென் றிதுகாறும் அறியோம் இருவருமொன் றாயினரென் றேயறையும் சுருதி’

என்பது ஆசிரியர் வாக்கு.

நாடகத்தின் முக்கிய பாத்திரமாகிய புருடோத்தமனை முதல் முதல் நேராக அறிமுகப்படுத்தும் ஆசிரியர் (இரண் டாம் அங்கம்-முதற்களம்) அவன் வீரம் முதலியவற்றை முன்னிறுத்தாது புருடனாகவே முன்னிறுத்திக் காட்டு கின்றார். சுந்தரமுனிவர் வழியே முதன் முதல் நமக்கு அறிமுகப்படுத்தும் ஆசிரியர், அவனை, -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/223&oldid=684773" இலிருந்து மீள்விக்கப்பட்டது