பக்கம்:தாய்மை.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 தாய்மை

சகமெலாங் தங்க நிழலது பரப்பி, தொலைவிலாத் துன்னலர் வரினும் அவர்தலை இலையெனும் வீரமே இலையாய்த் தழைத்து பூமணம் கமழும் குணம்பல பூத்து துனிவரும் உயிர்க்குள் துன்பம் துடைப்பான் கனியுங் கருணையே கனியாய்க் காய்த்துத் தருமகா டெனும் ஒருநாமங் கொள் திருவாழ் கோடாஞ் சேர தேசத்துப் புருடோத் தமனெனும் பொருவிலாப் புருடன்’

(-4 - வரி 190 - 8)

எனக்காட்டுவர். அப்படியே மனோன்மணி வா க் சி ல் ‘இதுவென வொண்ணா உவமையில் ஒருவர் எனக் குறிப்பர். ஆயினும் அவனை நேரில் அறிமுகம் செய்யும் போது ஒரு காதல் உள்ளம் படைத்தவனாக-காதலியைத் தேடும் காதலனாக-உயிரைத் தேடும் இறைவனாகக் காட்டி, நாடகத்தின் பிற்பகுதியினையும் நமக்குச் சுட்டிக் காட்டுகிறார் ஆசிரியர்.

இப் புருடோத்தமன் உளப்பண்பையும் உயர்ந்த செம்மை நிலைமையினையும் அவன் செயலாலும் சொல்லாலும் அவனைப்பற்றிய பிறர் பேச்சுக்களாலும் காட்டி. அவனையே நாடகத்தின் கதா நாயகன் ஆக்கு கிறார். சிலர் இந்நாடகத்துக்குக் கதாநாயகன் சீவகவழுதி யெனக் கூறமுனைந்தாலும் தெளிவுடையார் புருடோத்த மனையே கொள்வர், உண்மையும் அதுதான். அப்படியே மனோன்மணி கதைத் தலைவியாகின்றாள்.

மனோன்மணியின் பாத்திரப்படைப்பினைப் பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. அவள் பெயராலேயே இந்த நூல் அமைகின்றது. மனோன்மணியை நேரில் காட்டு முன்பே பிறபாத்திரங்களால் அவள் பண்பினைக் காட்டுகிறார் ஆசிரியர். நகர மாந்தர் வாயிலாக,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/224&oldid=684774" இலிருந்து மீள்விக்கப்பட்டது