பக்கம்:தாய்மை.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனோன்மணியத்தில் பாத்திரப்படைப்பு 228

அன்பே உயிரா அழகே யாக்கையா மன்பே ருலகுசெய் மாதவ மதனால் மலைமகள் கருணையும் கலைமகள் உணர்வும் கமலையின் எழிலும் அமையவோர் உருவாய்ப் பாண்டியன் தொல்குல மாகிய பாற்கடல் கீண்டெழு மதியென ஈண்டவ தரித்த மனோன்மணி அன்னை என்று அறிமுகப்படுத்துகிறார். தம் பெற்றோர் நீண்ட நாள் மகப்பேறின்றி மதுரைச் சோமசுந்தரர் அருளால் தாம் பிறந்தமை போன்றே, சீவகவழுதியினையும் நீண்ட நாள் மகப்பேறற்றவனாக்கி, சுந்தர முனிவர் அருளால்: மனோன்மணி பிறந்ததாகக் காட்டுவர் ஆகிரியர். ஆம்!” தாம் இறையருளால் பிறந்தமை போன்றே தாம் பெற்ற சிறந்த பாத்திரமாகிய-நூலின் தலைவியாகிய மனோன் மணியும் இறையருளால் பிறந்தவன் எனக் காட்டுவர். ஆசிரியர். இப்படியே சுந்தரமுனிவரையும், தம் மனைவி, மகன் இவர்கள் தம் பெயர்களையும் நல்ல பாத்திரங். களுக்கு இட்டு (சிவகாமி-மனைவி; நடராசன்-மகன்): நாடகத்தில் நன்கு பேசவைத்து, உயர்ந்த நெறியில் நம்மையெல்லாம் ஈர்த்துச் செல்லுவதை நினைப்பின் இந்நாடகமும் இவர் வாழ்வும் பின்னிப் பிணைந்தனவோ என எண்ணத் தோன்றும்.

இவர்களைத் தவிர்த்துச் சீவகன், குடிலன், பலதேவன் போன்ற பாத்திரங்கள் பொதுவாகப் பிற நாடகங்களில். வரும் பாத்திரங்கள் போன்றே அமைக்கப் பெற்றுள்ளன. உலக வாழ்க்கையில் உண்மை மறைக்கவோ மறுக்கவோ பட்டதாகி, கொடுமை மேலோங்கி ஆட்சி செலுத்த, இறுதியில் அறம் வெல்லும் பாவம் தோற்கும்’ என்ற அடிப்படை நிலவும் நிலையிலேயே இப் பாத்திரங்களை முன்னிறுத்தி அந்நியர் நலக் கேடுகளில் ஆக்க நிலையினை யும் அழிவு நிலையினையும் சுட்டுகிறார். கடமை, உரிமை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/225&oldid=684775" இலிருந்து மீள்விக்கப்பட்டது