பக்கம்:தாய்மை.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

... 224 தாய்மை

பொறாமை, தன்னலம், பிறர் வாழச் சகியாமை, நேர்மை, காதல் போராட்டம், அதற்கென அமையும் தடைகள் போன்ற பல இப்பாத்திரங்களால் நன்கு காட்டப் பெறுகின்றன. எனினும் இப்பாத்திரங்களுள் சுந்தர முனிவருக்கு அடுத்து வாணி உயரிடம் பெறுகிறாள். ஆசிரியர் அவளிடம் உயர் பண்பினைப் புகுத்திக் காட்டுவதோடல்லாமல், அவளை உயர்ந்த அறிவாளி யாகவும், இடமறிந்து அறம் உணர்த்தும் ஆசானாகவும், திறம் பெற்ற பேச்சாளியாகவும் காட்டுகிறார். சங்க இலக்கியங்களிலே வரும் அகப்பாடல்களுள் தலைவியின் செயலைக் காட்டிலும் தோழியின் செயலே விஞ்சி நிற்பதைக் கானும் நமக்கு இங்கும் இதன் ஆசிரியரும் தலைவியினும் தோழியின்செயலும்சொல்லும்விஞ்சி விளக்க முறும் நிலையினைக் காட்டும் மரபு நன்கு வெளிப்படும்.

மனோன்மணியின் தோழியாக அமைக்கப் பெற்ற .பாத்திரமாகிய தோழி - வாணி - மனோன்மணிக்கு ஆசா னாக - அன்னையாக - அறம் உணர்த்தும் குருவாக உற்ற துணையாக - அவளுக்காகத் தன் வாழ்வையே தியாகம் செய்ய முனையும் அறச்செல்வியாகக் காட்சியளிக்கின்றாள், என்பதை நூல்வழி நுழைவார் யாவரும் அறிவர், கழல் விளையாடல் முதல் (முதல் அங் - இரண் - களம்) காதலில் வெற்றி காணும் கடைசிக் காட்சி வரை வாணியின் பேச்சும் செயலும் படிப்போரை வியக்கச் செய்கின்றன. நாடாளும் மன்னன் முன் தடுமாற்றமின்றி அவனுக்கு எதிராகத் தன் கருத்தை எடுத்து விளக்கும் போது அவள் வீரத்தன்மை (1 - 4ஆம் களம்) நன்கு வெளிப்படுகிறது. இறக்கினும் இறைவ! அதற்குயான் இசையேன்” என்று அரசனையே எதிர்த்து நிற்கும் அவள் தோற்றம் நம்மையும் அஞ்ச வைக்கிறது.

பின் வாணி சி வ கா மி யி ன் சரிதம் பற்றிப் பாட்டிசைக்கும் இடத்தே அவள் சாதுரியத்தையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/226&oldid=684776" இலிருந்து மீள்விக்கப்பட்டது