பக்கம்:தாய்மை.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228. தாய்மை

பாத்திரங்களைப் பேசவைத்து உலக வாழ்க்கைத் தத்துவத் தினையும் அதற்கும் அப்பாலுள்ள உயிர்த் தத்துவத்தையும் உணரவைக்கிறார் ஆசிரியர் சுந்தரம் பிள்ளையவர்கள். மனோன்மணிய நாடகம் வெறும் கற்பனையோ அன்றித் தழுவலோ ஆனாலும், அதில்வ்ரும் பாத்திரங்கள் அனைத்தும் அவர் உள்ளத்து என்றும் ஊறும் தத்துவக் கருத்துக்களைக் கொண்டே நடமாடுகின்றன-பேசு கின்றன-நடிக்கின்றன-உணர்கின்றன-உற்ற பிறசெயல் களை ஆற்றுகின்றன. ஆம்! அப்பாத்திரங்களைப் பேச வைத்தது மட்டுமன்றி-இன்றும் என்றும் ஆசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்கள் வையம் முற்றும் போற்றிப் புரக்கவேண்டிய ஆக்கநெறிகளையும் அவற்றிற்கு நேரும் முட்டுக்கட்டைகளையும் சுட்டி, முடிவில் நேர்மை வெற்றி பெறும் நியதியில் நம்மை அமைதிபெற வைக்கிறார். உயர்ந்த உயிர் இறைவனை ஒன்றிக் கலக்கும் பேரின்பப் பெருவாழ்வுக்கு உறுதுணையாகிய காதல் வாழ்வினைக் காட்டி, அவ்விரண்டுக்கும் இணைந்த பிணைப்பினை விளக்கி, அவற்றுக்குப் பிறவற்றாலும் பிறராலும் வரும் இடர்ப்பாடுகளைக்காட்டி, இறுதியில் பெறுவது இணையும். பேரின்பமே என்பதை நூல்முழுதும் சுட்டுகிறார். பிள்ளை அவர்களின் பெருகிய தத்துவ உள்ளமே நாடகத்தின் நூலிழையாகி எல்லாப் பாத்திரங்களையும் இணைத்து நல்ல நூலாகிய மாலையை நமக்குத் தந்துள்ளது ஆம்: அந்த வாடாத மனோன்மணியம் என்னும் மாலை என்றும் மணம் வீசி வையத்தை வாழ வைத்துத் தானும் வாழும் என்பது உறுதி . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/230&oldid=684781" இலிருந்து மீள்விக்கப்பட்டது